அடுத்த மாதம் திறக்கக்கூடும் திரையரங்குகள்: கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படும்!!

Spread the love


புதுடெல்லி: அரசாங்கத்தின் அடுத்த அன்லாக் (Unlock) செயல்முறையில், அடுத்த மாதம் முதல், திரையரங்குகள் (Cinema Halls)  திறக்கப்படலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் தொற்றுநோயின் அளவும் எண்ணிக்கையும் குறைந்ததாக எந்த அறிகுறியும் தெரியவில்லை. உணவகங்கள், ஜிம்கள் மற்றும் மால்கள் மெதுவாக திறக்கப்பட பிறகு, ஆகஸ்ட் கடைசியில் அடுத்த கட்ட அன்லாக் செயல்முறைக்கான அறிவிப்புகளில் சினிமா அரங்குகளை திறப்பது பற்றி தெரிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

கடுமையான தனி மனித இடைவெளி (Social Distancing) மற்றும் சுத்திகரிப்பு விதிகளோடு, மற்ற கட்டிடங்களைச் சாராமல் தனியாக இருக்கும் சினிமா அரங்குகளை திறக்க அரசாங்கம் அனுமதிக்கக்கூடும்.

சினிமா அரங்குகள் மீண்டும் திறக்க வழங்கப்பட்டவுள்ள நிலையான இயக்க நடைமுறைகளில், திரைப்பட பார்வையாளர்கள் மாற்று வரிசைகளில் அமர்வது, ஒரே வரிசையில் மூன்று இருக்கைகள் இடைவெளியில் அமர்வது ஆகியவை இருக்கும். ஒரே நேரத்தில் அரங்கத்தில் அமர்ந்து படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைக்கப்படும்.

வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான பிற நடவடிக்கைகளில் காற்றின் வெப்பநிலையை 24 டிகிரிக்கு மேல் வைத்திருப்பதும் ஒரு பகுதியாக இருக்கக்கூடும்.

ALSO READ: சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுமா? அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு

ஸ்பெஷல் எஃபெக்டுகளைக் கொண்ட சில திரைப்படங்களுக்கு மட்டுமே 3 டி கண்ணாடிகள் தேவைப்பட்டாலும், திரைப்பட பார்வையாளர்கள் எல்லா நேரங்களிலும் முகக்கவசத்தை (Face Mask) அணிந்திருக்க வேண்டும். கை சுத்திகரிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றிய பொது விழிப்புணர்வு செய்திகள் இடைவேளையின் போது ஒளிபரப்பப்படும் என்று அறிக்கை கூறுகிறது.

தனித்து நிற்கும் சினிமா அரங்குகள் மீண்டும் திறக்கப்படக்கூடும் என செய்தி வந்திருக்கும் அதே வேளையில்,  ​​மால்களில் உள்ள மல்டிபிளக்ஸ் சினிமா அரங்குகள் குறித்து எந்த தெளிவும் இல்லை.

ஜிம் மற்றும் யோகா மையங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளதால், சினிமா ஹால்களையும் திறக்க வேண்டும் என அந்த உரிமையாளர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

தொடர்பில்லா டிக்கெட் வழங்கல், சீரான சுத்திகரிப்பு வழிகள் ஆகிய விதிமுறைகளுடன் சினிமா அரங்குகளைத் திறக்க அனுமதி வழங்கப்படலாம் என தற்போது அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. ஒவ்வொரு முறை காட்சி முடிந்தபின்னரும், சினிமா அரங்கம் முழுவதும் சுத்திகரிக்கப்படுவதை அரங்கத்தின் நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் பின்னர் பரந்த பகுதிகளை சுத்திகரிக்க உதவும் தொழில்நுட்ப தீர்வுகளைப் பயன்படுத்தவும் அரசாங்கம் அவர்களை ஊக்குவிக்கும்.

ALSO READ: TN அரசு பள்ளிகளில் இன்று முதல் மாணவர் சேர்க்கை தொடக்கம்..!





Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *