அடேய் உங்க அலும்புக்கு ஒரு அளவே இல்லையா… வைரலாகும் புதுமண தம்பதியின் போட்டோ ஷூட்..!

Spread the love


கேராளா தம்பதியினர் நடத்திய திருமணத்திற்கு பிந்தைய போட்டஷூட் ஒன்று இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது..!

“திருமணம் ஆயிரம் காலத்துப்பயிர்” என்ற பழமொழியை வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்லி நான் கேட்டிருப்போம். ஆம், உணமைதான் திருமணம் என்பது ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும், ஆதாரமாகவும் அமையும் உறவே கணவன் மனைவி உறவு. ஒருவரை ஒருவர் தனக்குத்தான் பாத்தியம் என்று எண்ணுகின்ற உறவே தாம்பத்திய உறவு. உப்பையும், கசப்பையும், இனிப்பாக்க வல்லது இவ்வுறவு. புது புது உறவுகளை உருவாக்க கூடியது. 

அதுவும், இந்திய திருமணம் என்றாலே வண்ணமயமான கொண்டாட்டம் என்று கூறலாம். தற்போது உள்ள இளைஞர்கள் தங்களின் திருமணங்களை வித்தியாசமாக யோசித்து நடத்தி கொள்கின்றனர். இந்த நாட்களில் திருமண போட்டோஷூட்கள் கட்டாயமாகும். ஒரு தொழில்முறை நிபுணர் திருமணத்திற்கு முந்தைய படப்பிடிப்பைப் பெறுவதற்கு முன்பு உங்கள் வாழ்க்கையின் அழகான கட்டத்தை நீங்கள் தொடங்கத் தெரியவில்லை. தம்பதிகள் தங்கள் கனவு இடங்களை கேமராவுக்கு முன்னால் காட்டி, வாழ்நாள் முழுவதும் மகிழ்விக்க நினைவுகளை உருவாக்குகிறார்கள். இந்நிலையில், ஒரு புதுமண தம்பதி திருமணத்திற்கு பின்னர் எடுக்கும் அவுட் டோர் ஷூட்டிங்கை வித்தியாசமாக நடத்தியுள்ள சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.  

ALSO READ | CAA-க்கு வித்தியாசமான முறையில் எதிர்ப்பு தெரிவித்த கேரளா தம்பதி!

பொதுவாக திருமணம் முடிந்த புதுமண தம்பதியனர் தங்களது இனிமையான பந்தத்தை நினைவில் வைத்து கொள்ள போட்டோஷூட் நடத்துவது வழக்கம். இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாதளங்களில் தங்களுக்கு பிடித்தது போல் மார்டன், மார்டனாக போட்டோஷூட் நடத்தி இல்லற வாழ்க்கையை இனிமையாக தொடங்குவார்கள். ஆனால், கேரளாவில் ஒரு புதுமன தம்பதிகள் படுக்கை அறையில் ரொமான்ஸ் செய்வதை தேயிலை தோட்டத்தில் செய்து போட்டோஷூட் நடத்தியுள்ளனர். 

தேயிலை தோட்டத்தில் தம்பதியனர் தங்களது உறவை நெருக்கமாக காட்டும்விதமாக அவர்கள் எடுத்த போட்டோஷூட் இணையத்தில் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. தம்பதியனர் வெள்ளை நிற துணியை மட்டும் போர்த்தியவாறு போட்டோஷூட் நடத்தி உள்ளனர். இந்த புகைப்டங்கள் அநாகரீகமாகவும், ஆபாசமாகவும் உள்ளதாக பலர் இதனை டிரோல் செய்துள்ளனர். இந்த போட்டோஷட்டிற்கு பல எதிர்ப்புகள் கிளம்பிய போதும் தம்பதியனர் இந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் இதுவரை நீக்காமல் உள்ளனர். 

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *