அட..கொரோனா காலத்திலும் இந்த நிறுவனத்தில் 1.2 லட்சம் ஊழியர்களுக்கு பதவி உயர்வு!!

Spread the love


புதுடெல்லி: உலகளவில் மிகவும் வெற்றிகரமான ஐ.டி நிறுவனங்களில் ஒன்றான Infosys இந்த கொரோனா காலத்தில் தன் பணியாளர்களுக்கு ஒரு நல்ல செய்தியைக் கொண்டு வந்துள்ளது. தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 2.4 லட்சம் பணியாளர்களில் பாதிக்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு செப்டம்பர் மாதத்திற்குள் பதவி உயர்வுகளை (Promotions) அளிக்க நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

உலகளவில் உள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து நல்ல ஒப்பந்தங்களை இந்த நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில், தங்களிடம் இருக்கும் திறமையான, அர்ப்பணிப்பு மிக்க பணியாளர்களை ஊக்கப்படுத்தி தக்க வைக்கவே நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

COVID -19 தொற்றுநோயால் ஏற்பட்ட இடையூறு காரணமாக ஏப்ரல் மாதத்தில் பதவி உயர்வு செயல்முறை நிறுத்தப்பட்டது. ஜூனியர் மற்றும் நடுத்தர அளவிலான ஊழியர்களுக்கு பதவி உயர்வு முக்கியமாக வழங்கப்படும் என்று Infosys நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

இப்போது, ​​கொரோனா காலத்தில், வீட்டிலிருந்து பணி புரிவது வழக்கமாகி வருகிறது. வாடிக்கையாளர்களும் அவுட்சோர்சிங்கை விரும்புகிறார்கள். 2021 நிதியாண்டில் 0-2% என்ற வளர்ச்சி விகித எதிர்பார்ப்புடன், தன்னை ஒத்த நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி Infosys நல்ல வளர்ச்சியைக் கண்டது. தற்போது, வளர்ச்சியை இன்னும் முன்னோக்கி எடுத்துச் செல்ல, நிறுவனம் தன் பணியாளர்களை ஒருங்கிணைக்க முயல்கிறது.

பெங்களூருவைத் (Bengaluru) தலைமையிடமாகக் கொண்டுள்ள இந்த நிறுவனம், வேலை நிலை (JL) ஐந்து மற்றும் அதற்குக் குறைவான நிலைகளில் உள்ள பணியாளர்களுக்கான பதவி உயர்வுகளுக்கு முன்னுரிமை அளிக்கும். இந்த நிலைகளில் பெரும்பாலும் 10 வருடங்களுக்கும் குறைவான பணி அனுபவம் கொண்ட ஊழியர்கள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. Infosys இந்த ஆண்டு தனது ஜூனியர் மற்றும் நடுத்தர அளவிலான ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் முதல் பெரிய இந்திய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமாக இருக்கப்போகிறது. உலகளாவிய போட்டியாளர்களான காக்னிசண்ட் மற்றும் காப்ஜெமினி, ஒரு பெரிய இந்திய இருப்பைக் கொண்டுள்ளன. அவையும் தங்கள் ஊழியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளை வழங்கியுள்ளன.

ALSO READ: வேலை தேடுபவர்களுக்கு ஒரு நற்செய்தி!…. ‘Kormo Jobs’ செயலியை அறிமுகம் செய்த கூகிள்!!

மூத்த நிலை ஊழியர்களைப் பொறுத்தவரை, வணிக நிலைமை வளர்ச்சியடையும்போது, பதவி உயர்வுகள் பற்றி மதிப்பிடப்படும் என Infosys தெரிவித்துள்ளது. பதவி உயர்வுகள் சிறப்பாக செயல்படும் பணியாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கான ஒரு முயற்சி என்றும் அனைவருக்கும் சம்பள உயர்வு கிடைக்காது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

Infosys, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், எச்.சி.எல் டெக்னாலஜிஸ் மற்றும் விப்ரோ உள்ளிட்ட இந்தியாவின் சிறந்த ஐ.டி சேவை நிறுவனங்கள் கோவிட் -19 தொற்று காரணமாக பணியமர்த்தலை நிறுத்திவிட்டன. மேலும் இந்த நிறுவனங்களில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவையும் தாமதிக்கப்பட்டன. இது வணிகக் கண்ணோட்டத்தில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியது. ஆனால் இப்போது வாடிக்கையாளர்கள் அவுட்சோர்சிங்கை முடுக்கிவிட்டிருப்பதால், ​​இந்த நிறுவனங்கள், கல்லூரிகளுக்குச் சென்று வழக்கம் போல் இறுதி ஆண்டு மாணவர்களை பணிகளுக்கு தேர்ந்தெடுக்கவும் தயாராகி வருகின்றன. இது தவிர, இவை போட்டி நிறுவனங்களின் அனுபவம் வாய்ந்த நிபுணர்களை பணியமர்த்துவதன் மூலம் தங்கள் திறமைத் தளத்தில் மெதுவாக இடைவெளிகளை சரிசெய்கின்றன.

இந்த காலாண்டில், Infosys நிறுவனம் மூத்த பதவிகளுக்கான ஆட்சேர்ப்பைத் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. 

ALSO READ: இளைஞர்களை வேலைவாய்ப்புக்கு தகுதி உடையவர்களாக மாற்ற புதிய இயக்கம்- PMK

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *