
அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து உருளைக்கிழங்கு, வெங்காயம் நீக்கம் ….!!!!
65 ஆண்டு கால பழமையான அத்தியாவசிய பொருட்கள் சட்டம் திருத்தப்பட்டது. இனி உருளைக்கிழங்கு, வெங்காயம், பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் அத்தியாவசிய பொருட்கள் இல்லை.
புது தில்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அத்தியாவசிய பொருட்கள் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால், இனி தானியங்கள், பருப்பு வகைகள், உருளைக்கிழங்கு, வெங்காயம், சமையல் எண்ணெய் போன்றவை அத்தியாவசியப் பொருட்களின் பிரிவில் வராது.
2020 ஆம் ஆண்டு அத்தியாவசிய பொருட்கள் சட்ட திருத்த மசோதாவிற்கு, செப்டம்பர் 15, 2020 அன்று மக்களவை (லோக்சபா) ஒப்புதல் அளித்தது. இப்போது அது மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன் மூலம், இந்த விவசாய உணவுப் பொருட்கள் அனைத்தையும் அரசு இனி, கட்டுப்படுத்தாது, விவசாயிகள் தங்கள் உற்பத்திகளுக்கு ஏற்ற விலைகளை நிர்ணயிப்பதன் மூலம் விற்க இயலும்.
இருப்பினும், அரசாங்கம் அவ்வப்போது அதை மறுபரிசீலனை செய்யும். தேவைப்பட்டால் விதிகளை கடுமையாக்கலாம்.
மக்களவையில் இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் ரவுசாஹேப் டான்வே, இந்த மசோதா மூலம் விவசாயத் துறையில் உள்ள விநியோகச் சங்கிலி மிகவும் பலப்படுத்தப்படும், விவசாயிகள் அதிகாரம் பெறுவார்கள், இதன் மூலம் இத்துறையில் முதலீடு அதிகரிக்கும் என்றும் கூறினார்.
மேலும் படிக்க | குழந்தைகளின் உயிரைக் காக்க, உடல் உறுப்புகளை விற்க துணிந்த ஏழை தாய்..!!!
இருப்பினும், எதிர்க்கட்சிகள் அதை எதிர்த்தன. அஇதை திரும்ப பெற வேண்டும் என எதிர்க்கட்சி மத்திய அரசைக் கோரியது.
அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் வரும் அனைத்து பொருட்களின் விற்பனை, விலை, மற்றும் விநியோகத்தை மத்திய அரசு கட்டுப்படுத்துகிறது. இது அதன் அதிகபட்ச சில்லறை விலையை (MRP) தீர்மானிக்கிறது.
சந்தையில் தேவைக்கேற்ப ஒரு குறிப்பிட்ட அத்தியாவசிய பொருளின் சப்ளை மிகக் குறைந்தாலோ அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தாலோ, மத்திய அரசு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அத்தியாவசிய சட்டத்தை அமல்படுத்தி அதனை கட்டுப்படுத்துகிறது.