அன்லாக் 4.0: செப்டம்பர் 1 முதல் மீண்டும் மெட்ரோ சேவை; பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை

Spread the love


Unlock 4 Guidelines: இந்தியாவில் பொருளாதாரத்தை மேம்படுத்த செப்டம்பர் 1 முதல் செயல்படுத்தப்படும் அன்லாக் 4-ல் மேலும் சில தளர்வுகள் அளிக்கப்படலாம் எனத் தகவல்.

இந்தியாவின் நோய்த்தொற்று எண்ணிக்கை 3 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் நேரத்தில் அன்லாக் 4 அமல் செய்யப்பட உள்ளது. மேலும் கொரோனா வைரஸ் நோய் (COVID -19) காரணமாக 58,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.

அன்லாக் 4-ல் எது திறக்கப்படும்? எது மூடப்பட்டிருக்கும் என்பதைப் பாருங்கள்:

* மார்ச் 22 முதல் நிறுத்தப்பட்ட மெட்ரோ சேவைகளை (Metro services) மீண்டும் செப்டம்பர் 1 முதல் தொடங்க மத்திய அரசு அனுமதிக்க வாய்ப்புள்ளது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், மாநில அரசாங்கங்கள், மெட்ரோ ரயில் நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* மெட்ரோ சேவையை மீண்டும் தொடங்குவதற்கான வழிகாட்டுதல்கள் (Unlock 4 guidelines) இந்த வார இறுதியில் வழங்கப்படும்.

ALSO READ |  அடுத்த மாதம் திறக்கக்கூடும் திரையரங்குகள்: கடுமையான விதிமுறைகள்!

* மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பயணிகள் இனி டோக்கன்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள், ஏனெனில் கார்டுகளை மட்டுமே பயன்படுத்தி தொடர்பு இல்லாத டிக்கெட் முறையை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

* டேக்அவே சேவைகளுக்காக பார் (Bars) கவுண்டரில் மதுபானங்களை விற்க பார்கள் அனுமதிக்கப்படலாம். ஊரடங்கு நடைமுறைக்கு வந்த மார்ச் 25 முதல் அவை மூடப்பட்டன.

* பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் (Schools and Colleges) தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். ஆனால் ஐ.ஐ.டி (IITs) மற்றும் ஐ.ஐ.எம் (IIMs) போன்ற நிறுவனங்களை மீண்டும் திறக்க மத்திய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

* சினிமா அரங்குகள் (Cinema Halls) மற்றும் ஆடிட்டோரியங்களும் இன்னும் ஒரு மாதத்திற்கு மூடப்பட்டிருக்கும். சினிமா அரங்குகள் இப்போதே அனுமதிக்கப்பட்டாலும், உடல் ரீதியான தொலைதூர விதிமுறைகளின் காரணமாக 25-30% திறன் கொண்ட நிகழ்ச்சிகளை நடத்துவது அவர்களுக்கு நிதி ரீதியாக சாத்தியமில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ALSO READ |  Unlock 4: மெட்ரோ ரயில், சினிமா அரங்குகள், பள்ளிகள் நிலை என்ன..!!

* அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார, மத செயல்பாடுகள் மற்றும் பிற பெரிய சபை கூட்டங்களும் அடுத்த மாதம் வரை தடைசெய்யப்பட வாய்ப்புள்ளது.

* கட்டுப்பாட்டு மண்டலங்களில் (Containment Zones) தொடர்ந்து கடுமையான ஊரடங்கு மற்றும் கண்காணிப்பின் கீழ் இருக்கும்.

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *