அரசு நடத்தும் அனைத்து மதரஸாக்களும் அரசு பள்ளியாக மாற்றப்படும்: அஸ்ஸாம் அமைச்சர்

Spread the love


குவாஹாட்டி: மதரஸாக்கள் வாரியத்தை கலைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது என்றும், அரசு நடத்தும் அனைத்து மதரஸாக்களும் ஒரு பொதுப் பள்ளியாக மாற்றப்படும் என்றும் அஸ்ஸாம் கல்வி மற்றும் நிதி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா சனிக்கிழமை தெரிவித்தார்.

நவம்பரில் அஸ்ஸாம் அரசு நடத்தும் அனைத்து மதரஸாக்களையும் மூட அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று கூறிய சில நாட்களில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அஸ்ஸாமின் தனியார் மதரஸாக்களை மூடும் எண்ணம் மாநில அரசுக்கு இல்லை என்றும் சர்மா மேலும் கூறினார்.

“நாங்கள் தனியார் மதரஸாக்களை முறைப்படுத்த சில கட்டுப்பாட்டைக் கொண்டு வருகிறோம், மாணவர்கள் ஏன் மதரஸாவில் இருக்கிறார்கள் என்பதை தெளிவாகக் கூற வேண்டும். மதரஸாக்களில் அறிவியல் கணித பாடங்களை பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்த வேண்டும். அவர்கள் மாநில, அரசியலமைப்பு ஆணையின் கீழ் மதரஸாக்களை பதிவு செய்ய வேண்டும்”என்று சர்மா கூறினார்.

சர்மா தனது முந்தைய அறிவிப்பில், அனைவரையும் அரசு பொதுவாக நடத்தும் நோக்கில்,  அரசு செலவில் ‘குர்ஆன்’ கற்பிப்பதை அனுமதிக்க முடியாது. அப்படி செய்தால்,  பிற சமூகங்களின் மதக் கல்விக்கும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

மேலும் படிக்க | இந்தியா-தைவான் நெருக்கத்தால் ஆத்திரமடையும் சீனா… சிக்கிமை பிரிப்போம் என புலம்பல்..!!!

இது குறித்து விரிவாகக் கூறிய சர்மா, மேற்கூறிய மதரஸாக்களால் அதிக அளவில் வழங்கப்பட்ட பட்டம் வேலை வாய்ப்பு சந்தையிலும் நெருக்கடியை உருவாக்குகிறது என்று கூறினார்.

அஸ்ஸாமில், மொத்தம் 614 அங்கீகரிக்கப்பட்ட மதரஸாக்கள் உள்ளன. அவற்றில் 57 சிறுமிகளுக்கானது, மூன்று சிறுவர்களுக்கானது மற்றும் 554 இரு பாலரும் படிக்கும் மதரஸாக்கள்,  17  உருது மீடியத்தில் இயங்கும் பள்ளி.

சர்மாவின் அறிவிப்பு அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவர் பத்ருதீன் அஜ்மலின் விமர்சனத்தை சந்தித்தது. பாஜக தலைமையிலான அரசாங்கம் அரசாங்கத்தால் நடத்தப்படும் மதரஸாக்களை மூட முடிவு செய்தால், 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சிக்கு வந்த பின்னர் தனது கட்சி மீண்டும் அவற்றைத் தொடங்கும் என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க | மத ஒற்றுமையை குலைப்பதாக கங்கனா மீது மும்பை போலீஸ் வழக்கு பதிவு செய்யவும்: நீதிமன்றம் 

சர்மாவின் அறிவிப்பை அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவர் பத்ருதீன் அஜ்மல் கண்டனம் செய்தார். பாஜக தலைமையிலான அரசு, அரசாங்கத்தால் நடத்தப்படும் மதரஸாக்களை மூட முடிவு செய்தால், 2021 சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர்,  அவற்றைத் தொடங்கும் என்று அவர் கூறினார்.

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *