அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி கோரிய இந்தியாவின் முதல் COVID-19 தடுப்பூசி..

Spread the love


சீரம்-ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராஜெனெகா ஆகியோரால் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி இந்தியாவில் தயாரிக்கப்பட்டு சோதனைக்கு உட்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் தடுப்பூசியை (COVID-19 Vaccine) தயாரிக்கும் வெளிநாட்டு நிறுவனமான ஃபைசர்-பயோடெக்கிற்குப் (Pfizer-BioNTech) பிறகு, இந்திய நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (Serum Institute of India) கொரோனா வைரஸ் தடுப்பூசியை அவசரமாக பயன்படுத்த அனுமதி கோரியுள்ளது. கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதிக்க கோரி சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரலுக்கு ஒரு விண்ணப்பத்தை அனுப்பியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ALSO READ | கொரோனாவிலிருந்து தப்ப கபசுர குடிநீர் குடிக்கிறீர்களா.. அப்படீன்னா இதை அவசியம் படிங்க..!!!

சீரம்-ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராஜெனெகா ஆகியோரால் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசியான (CORONAVIRUS VACCINE) கோவிஷீல்ட் (covishield) இந்தியாவில் தயாரிக்கப்பட்டு சோதனை செய்யப்படுகிறது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை (Coronavirus Vaccine) அவசரமாக பயன்படுத்த அனுமதி கோரிய முதல் இந்திய நிறுவனம் இதுவாகும். இதற்கு முன்னர், அமெரிக்க நிறுவனமான ஃபைசர் இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை அவசரமாக பயன்படுத்த அனுமதி கோரியது.

இது குறித்து ICMR வெளியிட்டுள்ள தகவலின்படி, சீரம் இன்ஸ்டிடியூட் ஏற்கனவே 40 மில்லியன் டோஸ்களை தயார் நிலையில் வைத்துள்ளது. மருந்து கட்டுப்பாடு அமைப்பு அனுமதி வழங்கிய உடன் மருத்துவ துறை ஊழியர்களுக்கு இந்த மருந்தை அவசர கால அடிப்படையில் வழங்கலாம் என்று சீரம் திட்டமிட்டுள்ளது. கோவிஷீல்டு என்று பெயரிடப்பட்ட இந்த தடுப்பூசி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ICMR மேற்பார்வையின் கீழ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. பிரேசில் மற்றும் பிரிட்டன் நாடுகளிலும் மூன்றாவது கட்ட பரிசோதனை நடைபெற்று வருகிறது. 

ALSO READ | மார்ச் 31 வரை 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கபடாது..

மேலும், இந்த தடுப்பூசி 90% பலன் அளிக்கிறது என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இதுவரை நடத்தியுள்ள சோதனைகள் மூலமாக தெரிய வந்துள்ளது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த நிலையில்தான், அவசரகால பயன்பாட்டுக்கு தடுப்பூசிக்கு அனுமதி கேட்டுள்ளது சீரம் இன்ஸ்டியூட். முதியோருக்கும் இந்த தடுப்பூசி பலன் அளிப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. இந்த தடுப்பூசியை 2 டிகிரி செல்சியஸ் முதல் 8 டிகிரி செல்சியஸ், குளிர்பதன பகுதியில் வைத்து பாதுகாத்துக் கொள்ள முடியும், ஆனால் ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை 70 டிகிரி செல்சியஸ் நிலையில் வைத்து பாதுகாக்கப்பட வேண்டியது ஆகும். எனவே, கோவிஷீல்டு தடுப்பூசி, இந்தியா போன்ற போதிய சேமிப்பு கட்டமைப்பு வசதி இல்லாத நாடுகளுக்கு மிகவும் பலன் கொடுக்கக் கூடியது என்கிறார்கள் சுகாதாரத் துறை வல்லுநர்கள்.

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்… 

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

 

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *