அஸ்ஸாம் மிசோரம் எல்லையில் பதற்றம்.. வன்முறையில் பலர் காயம்..!!!

Spread the love


குவஹாத்தி: அஸ்ஸாம்-மிசோரம் எல்லை பிரச்சனை தொடர்பக பிரதமர் அலுவலகம் மற்றும் உள்துறை அமைச்சகத்திடம், அஸ்ஸாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் (Sarbananda Sonowal) தொலைபேசியில் பேசினார். சோனோவால் தனது மிசோரம் முதல்வர் சோரம்தங்காவையும் ( Zoramthanga) தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

அசாமுக்கும் மிசோரமுக்கும் இடையிலான புதிய எல்லை தகராறில் குறைந்தது 8 பேர் காயமடைந்து வீடுகள் மற்றும் கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன.

அசாமில் கச்சார் எல்லையில் உள்ள வைரெங்டே-லைலாப்பூர் மற்றும் மிசோரத்தின் கோலாசிப் ஆகிய இடங்களில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

“தொலைபேசி உரையாடலின் போது, ​​முதல்வர் சோனோவால், ஆக்கபூர்வ  நடவடிக்கைகளை எடுப்பது மற்றும் எல்லை பிரச்சினைகளை தீர்க்க கூட்டாக முயற்சிகள் குறித்து வலியுறுத்தினார். எல்லைப் பிரச்சினையை இணக்கமாக தீர்ப்பதற்கும் அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை பேணுவதற்கு ஒத்துழைப்புடன் பணியாற்றுவதற்கும் வலியுறுத்தினார், ”என்று முதல்வரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ | ‘130 கோடி மக்கள் வாழும் நாடு யாருக்கும் தலைவணங்காது’: சீனாவுக்கு Amit Shah-வின் அதிரடி பதில்!!

ஒருவர் காயமடைந்த நிலையில் மூன்று வீடுகள் மற்றும் சில சாலையோர கடைகள் தீக்கிரையாக்கப்பட்டதாக கச்சார் போலீசார் தெரிவித்தனர். 40 க்கும் மேற்பட்ட அசாம் கிராமவாசிகள் காயமடைந்ததாக உள்ளூர்வாசிகள் கூறினர்.

மிசோரமில் சேர்ந்த குண்டர்கள் எந்த காரணமும் இல்லாமல் பிரச்சினைகளை உருவாக்கி வருகின்றனர் என்றும் அவர்கள் மூன்று வீடுகளையும்  சாலையோரங்களில் இருந்த சில கடைகளையும் எரித்தனர் என்றும் ஊடகங்களிடம் கிராம வாசிகள் தெரிவித்தனர். காயமடைந்த கிராமவாசிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரச்சனையை தீர்க்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்

மிசோரத்தைச் சேர்ந்த ஏழு பேர் காயமடைந்ததாக அம்மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சோரம்தாங்கா சோனோவாலிடம், அமைதியைப் பராமரிக்கப்படும் என உறுதியளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ALSO READ | Unlock 05: எந்தெந்த மாநிலங்களில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு.. கட்டுபாடுகள் என்ன? 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYe

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *