ஆசிரியர்களுக்கு கட்டாய COVID-19 சோதனை; செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்க வாய்ப்பு

Spread the love


புது டெல்லி: செப்டம்பர் முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க உள்துறை அமைச்சகம் தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை என்றாலும், சில மாநில அரசு பள்ளிகளை மீண்டும் திறக்க தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில் அஸ்ஸாம் அரசு (Assam Government) மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை கட்டாயமாக COVID-19 பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனக்கூறி, நாளை மறுநாள் முதல் கொரோனா சோதனை செய்யப்பட உள்ளது. 

செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறந்ததும் கொரோனா நோய்தொற்று இல்லாதவர்கள் மட்டுமே பணியில் சேர அனுமதிக்கப்படுவார்கள் என்று கல்வி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா (Himanta Biswa Sarma) தெரிவித்தார். COVID கட்டாய சோதனை ஆகஸ்ட் 21 முதல் தொடங்கும் என்றார். 

ALSO READ |  குழந்தைகளின் நலன் தான் முக்கியம்!! தற்போதைக்கு பள்ளி, கல்லூரிகளை திறக்க வாய்ப்பில்லை

இருப்பினும், செப்டம்பர் 1 ஆம் தேதி வகுப்புகள் தொடங்கப்படாது. ஊழியர்கள் மட்டுமே தங்கள் பணிகளை செய்ய கேட்கப்படுவார்கள். மத்திய அரசு உத்தரவு அளித்த பின்னர் தான், மாணவர்கள் வகுப்பிற்கு அழைக்கப்படுவார்கள்.

கல்வி நிறுவனங்களின் (Educational Institutions) ஊழியர்கள் செப்டம்பர் 1 க்குள் தங்கள் பணியில் சேர வேண்டும். பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுக்காக நாங்கள் காத்திருப்போம், மேலும் 24 மணி நேரத்திற்குள் நிலையான இயக்க நடைமுறை (எஸ்ஓபி –  SOP) வெளியிடுவோம்” என்று சர்மா கூறினார்.

ALSO READ |  மத்திய அரசு பள்ளிகளின் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

ஊரடங்கு (Lockdown) காரணமாக தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிச் சென்ற ஊழியர்கள், உடனடியாக திரும்பி வரவேண்டும். பள்ளிக்கு வர வேண்டும் என உத்தரவு வரும் வரை, பணிபுரியும் ஊரில் காத்திருப்புடன் இருக்க வேண்டும். ஒருவேளை பணிக்கு வரவில்லையெனில், அது ஊதியம் இல்லாதா விடுப்பு என்று கருதப்படும் என்றார்.

கவவுஹாட்டி உயர்நீதிமன்றம் (Gauhati High Court)கட்டணங்கள் தொடர்பாக மாநில அரசுக்கு உத்தரவு அளித்ததைத் தொடர்ந்து, தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு 25 சதவீதம் விலக்கு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *