ஆன்லைன் மருந்து விற்பனையை துவங்கியது அமேசான் நிறுவனம்!!

Spread the love


அமேசான் மருந்தகம் என்ற ஆன்லைன் சேவை மூலம் அமேசான் மக்களுக்கு மருந்துகளை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது!!

உலகின் மாபெரும் E-காமர்ஸ் நிறுவமான அமேசான் இந்தியாவில் ஆன்லைன் மருந்து விற்பனையை பெங்களூருவில் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. மருந்து விற்பனையாளர்கள், மின் மருந்தகங்கள் மற்றும் மருந்துக் கடைகள், இந்தியாவில் ஒரு புதிய போட்டியாளரைக் எதிர்கொள்ளப் போகின்றன. உலகின் மாபெரும் E-காமர்ஸ் நிறுவமான அமேசான் இந்தியாவில் ஒரு ஆன்லைன் மருந்து விற்பனையை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்நிறுவனம் பெங்களூருவில் முதல் கட்டமாக இந்த சேவையை தொடங்க உள்ளது.

பெங்களூருக்குப் பிறகு நாட்டின் பிற நகரங்களில் இந்த சேவை தொடங்கும் ‘அமேசான் பார்மசி’ அறிவிப்பை நிறுவனம் ஒரு அறிக்கையில் அறிவித்துள்ளது. “அமேசான் பார்மசி” என்ற பெயரில் சேவையை துவக்கும் அமேசான், மருத்துவர்களின் பரிந்துரைப்படி அளிக்கப்பட வேண்டிய மருந்துகளையும், அடிப்படை மருத்துவ சாதனங்கள் மற்றும் பாரம்பரிய இந்திய மூலிகை மருந்துகள் ஆகியவற்றையும் வழங்க உள்ளதாக ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ALSO READ | உலகின் ‘மலிவான’ மின்சார பைக்…. விலையை கேட்டு அப்படியே ஷாக் ஆகிடுவீங்க!!

கடந்த மாதம், அமேசான் நிறுவனம் இந்தியாவில் 10 புதிய கிடங்குகளைத் (warehouses) திறந்ததுடன், வாகன காப்பீட்டையும் புதிதாக வழங்கத் தொடங்கி உள்ளது. இது மட்டுமின்றி, அமேசான் ஒரு மாநிலத்தில் மது விநியோகத்திற்கான அனுமதியையும் பெற்றுள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

ஆன்லைன் மருந்து விற்பனை அல்லது மின் மருந்தகங்களுக்கான விதிமுறைகளை இந்தியா இன்னும் இறுதி செய்யப்படவில்லை.. தற்போதைய நிலையில் , ஆனால் மெட்லைஃப் (Medlife) , நெட்மெட்ஸ் (Netmeds), டெமாசெக் ஆதரவு ஃபார்ம் ஈஸி மற்றும் சீக்வோயா கேபிடல் ஆதரவு 1 எம்ஜி போன்ற பல ஆன்லைன் மருந்து விற்பனையாளர்களின் வளர்ச்சிக்கு மத்தியில் தற்போது அமேசானும் களம் இறங்கி இருப்பது, நாட்டின் பல்வேறு பாரம்பரியமான மருந்து கடைகளை அச்சுறுத்தியுள்ளது.

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *