இந்தியாவின் பாதி மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படலாம் அதிர்ச்சி தகவல்!

Spread the love


புதுடெல்லி: அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஒரு குழுவின் ஆய்வில் வியக்க வைக்கும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்தக் குழு, நாட்டின் நிலைமைகள், தரவுகள் பற்றிய விரிவான ஆய்வு ஒன்றை வெளியிட்ட பின்னர் ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அதிர்ச்சியூட்டும் ஆய்வின் படி, இந்தியாவின் நூற்று முப்பது கோடி மக்கள் தொகையில் பாதி பேர் அடுத்த ஆண்டு அதாவது 2021 பிப்ரவரி மாதத்திற்குள் கொரோனா வைரஸால் (COVID-19) பாதிக்கப்படலாம்.

IIT அதிகாரியின் அறிக்கை
குழு உறுப்பினரும், இந்திய தொழில்நுட்பக் கழகத்தை சேர்ந்தவருமான மானிந்த்ர அகர்வால் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், இந்தியாவில் பாதி பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு வந்த பிறகு, கொரோனா வைரஸ் தொற்றின் வேகம் வெகுவாகக் குறையும் என்று கூறியுள்ளார். 
அக்டோபர் 19ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட அரசாங்க தரவுகளின்படி, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழரை லட்சத்தை தாண்டியுள்ளது. அதாவது, கொரோனாவின் மொத்த வழக்குகளில் முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை இந்தாய் நெருங்கிவிட்டது.

ALSO READ: இந்தியா தற்போது COVID-19-ன் சமூக பரவல் நிலையில் உள்ளது: சுகாதார அமைச்சர் Harsh Vardhan

செப்டம்பர் நடுப்பகுதியில் இருந்து நிலைமை மேம்பட்டதா?
அரசாங்க தரவுகளின்படி, செப்டம்பர் இரண்டாவது வாரம் வரை, நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வந்தது. தற்போது, நாட்டில் தினமும் 61 ஆயிரம் புதிய கொரோனா வழக்குகள் பதிவாகின்றன. அதற்கு காரணம் பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் இந்திய மக்கள்தொகையில் 30%!
மானிந்திர அகர்வாலின் கூற்றுப்படி, அரசாங்கக் குழுவின் மதிப்பீட்டின் கீழ் நாட்டின் மக்கள் தொகையில் முப்பது சதவீதம் பேர் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, வரும் பிப்ரவரி மாதத்தில் நாட்டின் மக்கள் தொகையில் ஐம்பது சதவீதம் பேர் கொரோனாவின் வளையத்தில் சிக்கலாம்.  

‘ஜீரோ சர்வே மற்றும் செரோலாஜிகல் சர்வே‘ (‘Zero Survey and Serological Survey’)
மத்திய அரசின் இருவேறு விதமான கணக்கெடுப்புகளிலும் சற்று மாறுபாடு காணப்படுகிறது. பூஜ்ஜிய கணக்கெடுப்பு முறையின்படி, செப்டம்பர் மாதத்திற்குள், நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 14 சதவீதம் பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். குழு உறுப்பினர்கள் செரோலாஜிக்கல் கணக்கெடுப்பின் தரவுகளுடன் உடன்படவில்லை, ஏனெனில் அந்த கணக்கெடுப்பு தரமானதா என்பது பற்றி தெரியவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

ALSO READ: மனிதர்களின் தோலில் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் உயிர்வாழும் தெரியுமா?

மத்திய அரசின் ‘பாகீரத பிரயர்த்தன’ முயற்சி
நாட்டில் கொரோனாவுக்கு எதிரான போரின் தொடக்கத்தில், தொற்றுநோய் குறித்த சரியான கணிப்புகளைக் கண்டறிய மத்திய அரசு வைராலஜிஸ்டுகள் அடங்கிய 10 பேர் கொண்ட குழுவை அமைத்தது, இது ‘Progression of the COVID-19 Pandemic in India: Prognosis and Lockdown Impacts’ என பெயரிடப்பட்டது. கொரோனா வைரஸ் தொடர்பான பல முக்கிய விஷயங்களை இந்த குழு ஆய்வு செய்துள்ளது.

சமூக இடைவெளியின் முக்கியத்துவம் 

குழுவின் மற்றொரு கணிப்பின்படி, முகக்கவசம் அணியாமல் இருப்பது, வெளியில் வரும்போது சமூக இடைவெளியை பின்பற்றாதது போன்ற கவனக்குறைவுகள் இருந்தால், ஒவ்வொரு மாதமும் சுமார் 26 லட்சம் கொரோனா பாதிப்பு ஏற்படலாம் என்று இந்தக் குழு கவலை தெரிவித்துள்ளது.

நாட்டில் தொடரும் கொரோனா அச்சுறுத்தல் 
அவ்வப்போது கைகளை சுத்தம் செய்வது, சுகாதாரத்தை பேணுவது, முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது என மக்கள் கவனமாக இல்லாவிட்டால், பிப்ரவரி மாதத்திற்குள் நாட்டின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கொரொனா பெருந்தொற்றால் பாதிக்கப்படக்கூடும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *