இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் கேன்சர் நோயாளிகளின் எண்ணிக்கை 15.7 லட்சமாக உயரும்..!

Spread the love


இந்தியாவில் புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை அடுத்த ஐந்து ஆண்டுகளில் 13.9 லட்சத்திலிருந்து 15.7 லட்சமாக உயரக்கூடும் என ICMR அறிக்கை!!

நடப்பு ஆண்டில் இந்தியாவில் உள்ள புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை 13.9 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2025 ஆம் ஆண்டில் 15.7 லட்சமாக உயரக்கூடும் என்று ICMR மற்றும் பெங்களூருவை தளமாகக் கொண்ட நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சி தேசிய மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டில், நாட்டில் புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை 13.9 லட்சமாக இருக்கும் என்றும், தற்போதைய போக்குகளின் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டில் 15.7 லட்சமாக அதிகரிக்கும் என்றும் மதிப்பிட்டுள்ள தேசிய புற்றுநோய் பதிவு திட்ட அறிக்கை 2020-யை ICMR வெளியிட்டுள்ளது. 

28 மக்கள்தொகை அடிப்படையிலான புற்றுநோய் பதிவுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த மதிப்பீடு அமைந்துள்ளது, கூடுதலாக 58 மருத்துவமனையை சார்ந்த புற்றுநோய் பதிவுகளிலிருந்து தரவுகள் தொகுக்கப்பட்டுள்ளன. புகையிலை தொடர்பான புற்றுநோயானது 27.1 சதவீதத்தை பங்களிக்கும் வாய்ப்பு உள்ளது. 

ALSO READ | எச்சரிக்கை… உங்கள் தலைமுடி உதிர்வதற்கு Covid-19 காரணமாக இருக்கலாம்..!

பொதுவாக ஆண்களுக்கு நுரையீரல், வாய், வயிறு மற்றும் உணவுக்குழாய் ஆகியவற்றில் புற்றுநோய் ஏற்படுவதாகவும், பெண்களுக்கு மார்பகம் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படுகிறது எனவும் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் புற்றுநோய் சார்ந்த பதிவேடுகளின் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் சுமார் ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண்களும், ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களும் கேன்சரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

“பெண்களில், மார்பக புற்றுநோய் 2 லட்சம் (14.8 சதவீதம்) மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் 0.75 லட்சம் (5.4 சதவீதம்) பங்களிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் இரைப்பைக் குழாயின் புற்றுநோய்கள் 2.7 லட்சம் பங்களிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது (19.7 சதவீதம்) மொத்த புற்றுநோய் சுமையில்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பெண்களைப் பொறுத்தவரை, பாம்புரே மாவட்டத்தில் 219.8 முதல் ஒஸ்மானாபாத் மற்றும் பீட் மாவட்டத்தில் 49.4 ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *