இந்தியாவில் ஊடுருவ பாக். அமைத்த சுரங்கத்தை கண்டுபிடித்த BSF படையினர்….!!!

Spread the love


ஜம்முவில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லை வேலிக்கு அடியில் ஒரு சுரங்கப்பாதையை எல்லை பாதுகாப்பு படை (BSF) கண்டறிந்துள்ளது என்று அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். மேலும் இது போன்ற கட்டமைப்புகள் ஏதூனும் உள்ளதா என்பதை கண்டறிய இந்தப் பகுதியில் மிகப் பெரிய தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

ஊடுருவல் எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி, எல்லையில் ஊடுருவலுக்கான எந்த வாய்ப்பும் இல்லாமல் உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என எல்லை பாதுகாப்பு படை இயக்குநர் ஜெனரல் ராகேஷ் அஸ்தானா, உத்தரவிட்டுள்ளார்.

ஜம்முவின் சம்பா பகுதியில் ரோந்து பணியில் இருந்த எல்லை காவல் படை, எல்லையில் உள்ள இந்திய தரப்பு வேலியில் இருந்து சுமார் 50 மீட்டர் நீளமுள்ள இந்த சுரங்கப்பாதையை கண்டறிந்தது.

பின்னர் படையினர் சுரங்கப்பாதையை பரிசோதித்தபோது, ​​அதன் வாயில் பகுதியில் பிளாஸ்டிக் மணல் மூட்டைகள் இருந்தன. அந்த பைகளின் மீது பாகிஸ்தானை சேர்ந்தது என்பதற்கான அடையாளங்கள் இருந்ததாக, ராணுவ அதிகாரிகள் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர். கண்டறிந்ததாக அதிகாரிகள் பி.டி.ஐ. சுரங்கப்பாதையில், துவக்கத்தில் சுமார் 25 அடி ஆழத்துடன் உள்ளது.  எல்லை காவல்ப் படை இந்த பகுதியில் உளவு துறையுடன் இணைந்து மிகப்பெரிய தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

மேலும் படிக்க | சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டில் க்ரீமி லேயர் விதியை அமல்படுத்த கோரிக்கை..!!!

‘கராச்சி மற்றும் ஷாகர்கர்’ என்று எழுதப்பட்ட சுமார் 8-10 பிளாஸ்டிக் மணல் மூட்டைகள் சுரங்கப்பாதை நுழைவாயிலில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. மேலும் பைகள் உற்பத்தி மற்றும் காலாவதி தேதி அதில் உள்ளது. அதன் மூலம், அவை சமீபத்தில் தான்  தயாரிக்கப்பட்டன என்பதை உறுதிபடுத்துகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அருகிலுள்ள பாகிஸ்தான் எல்லை இடுகை சுரங்கத்திலிருந்து 400 மீட்டர் தொலைவில் உள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.

பஞ்சாபில்  ஐந்து ஆயுதமேந்திய ஊடுருவல்காரர்கள் அண்மையில் கொல்லப்பட்டதை அடுத்து, ஜம்மு மற்றும் பிற இடங்களில் உளவு துறையினர் மிகப்பெரிய  தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது. ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள 3,300 கி.மீ சர்வதேச எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள எல்லை பாதுகாவல் படையினர் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர்.

பாக்கிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவவும், ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலை மேற்கொள்ளவும் அதிக வாய்ப்புள்ள பகுதிகளில் சுரங்கங்களைக் கண்டறிவதற்கு தரை-ஊடுருவி கண்டறியும் ரேடார்கள் பயன்படுத்தப்படுவதையும் எல்லைப் படை ஆலோசித்து வருகிறது. முன்னதாக, ஜம்மு எல்லையிலும் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன 

மேலும் படிக்க | JEE, NEET 2020 தேர்வு உள்ள நிலையில் Unlock 4 தொடர்பான முக்கிய தகவல்கள்…!!!
 

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *