இந்தியாவில் விரைவில் கிடைக்கும் COVID மருந்து: Reda-x-ஐ வெளியிடவுள்ளது Dr. Reddys

Spread the love


ஹைதராபாத்: நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை, அரசாங்கத்தின் கவலையை அதிகரித்துள்ளன. ஆனால் இதற்கிடையில், மருந்துத் துறை நிறுவனமான டாக்டர் ரெட்டீஸ் (Dr. Reddys) லேபரேட்டரீஸ் லிமிடெட் இந்தியாவில் COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக ரெம்டெசிவிர் (Remdesivir)  மருந்தை சந்தையில் வெளியிடுவதாக அறிவித்தது. இந்த மருந்து ‘ரெடிக்ஸ்’ (reda-x) என்ற பிராண்ட் பெயரில் கிடைக்கும்.

Remdesivir மருந்து உரிமத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்படும்.

மருந்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கிலிட் சயின்சஸ் இன்க்குடன் உரிம ஏற்பாட்டின் கீழ் மருந்து வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கிலியட், டாக்டர் ரெட்டிஸ் லேபிற்கு Remdesivir –ஐ பதிவு செய்ய, உற்பத்தி செய்ய மற்றும் விற்க அதிகாரம் அளித்துள்ளது. COVID-19  இன் சாத்தியமான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் இந்த மருந்துக்கு இந்தியா உட்பட 127 நாடுகளில் இத்தகைய உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.

ALSO READ: ரஷ்யாவில் மக்களுக்கு COVID Vaccine தயார்: இந்தியாவிலும் ஒரு நற்செய்தி!!

மருந்து 100 மி.கி அளவில் கிடைக்கும்

இந்தியாவில் COVID-19  இன் கடுமையான அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளுக்கு அவசரகால சூழ்நிலைகளில் Remdesivir -ஐ பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் (DCGI) ஒப்புதல் அளித்துள்ளது. “டாக்டர் ரெட்டியின் ரெடாக்ஸ் ஒரு சிறிய 100 மி.கி பாட்டிலில் கிடைக்கும்” என்று நிறுவனம் கூறியுள்ளது.

கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும்

டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்களின் பிராண்டட் மார்க்கெட்ஸின் (இந்தியா மற்றும் வளர்ந்து வரும் சந்தைகள்) தலைமை நிர்வாக அதிகாரி எம்.வி.ரமண்ணா, “நோயுற்றவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய தயாரிப்புகளை உருவாக்குவதற்கான முயற்சிகளை நாங்கள் தொடர்ந்து செய்வோம்” என்றார். சந்தையில் ரெடாக்ஸின் அறிமுகம் இந்தியாவில் COVID-19  நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஒரு முக்கியமான மருந்தை அறிமுகப்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டைக் காட்டுகிறது என்று அவர் கூறினார்.

ALSO READ: இனி COVID பரிசோதனை செய்து கொள்ள doctor prescription தேவையில்லை: Delhi HC

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *