இந்தியாவில் 1983-க்கு பிறகு ஆகஸ்ட் மாதத்தில் அதிகப்படியான மழை பதிவு!

Spread the love


1976 ஆம் ஆண்டிலிருந்து இந்த ஆண்டு ஆகஸ்டில் இந்தியாவில் அதிக மழை பெய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது..!

இந்தியாவில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மத்திய மற்றும் குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் ஆகஸ்ட் முதல் மூன்று வாரங்களில் அதிக மழை பதிவாகியுள்ளது.

இந்த ஆகஸ்டில் 1976-க்குப் பிறகு முதல் முறையாக 25% அதிகப்படியான மழை பதிவாகியுள்ளது. ஆகஸ்ட் 12 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரம் 13% அதிகமாகவும், ஆகஸ்ட் 19 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரம் 42% அதிகமாகவும், ஆகஸ்ட் 26 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 41% அதிக மழையும் காணப்பட்டது.

இந்திய வானிலை ஆய்வு மையம் இதுகுறித்து கூறுகையில், செப்டம்பர் 3 வரை சராசரியாக மழை பெய்யும் என்றும், செப்டம்பர் 10 வரை வங்காள விரிகுடாவில் குறைந்த அழுத்தப் பகுதி எதுவும் உருவாக வாய்ப்பில்லை என்பதால் மழைப்பொழிவு குறையும் என்று தெரிவித்துள்ளது. நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, ஜம்மு-காஷ்மீர், லடாக் மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசம் தவிர பிற மாநிலங்களில் மழை பற்றாக்குறை நிலவுகிறது என்று ஸ்கைமெட் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ALSO READ | காற்று சுத்திகரிப்பு முகமூடியை அறிமுகம் செய்த LG: இதன் சிறப்பு அம்சம் என்ன?

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, செப்டம்பர் 3 ஆம் தேதி வரை லேசானது முதல் பரவலான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய வானிலை அறிக்கைப்படி வடக்கு சத்தீஸ்கரில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதால், அடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வுநிலை, அடுத்த 2 நாள்களில் வடக்கு மத்தியப்பிரதேசம் மற்றும் தெற்கு உத்தரப்பிரதேசத்தை நோக்கி நகரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும், அலைகள் வழக்கத்திற்கு மாறாக இருக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் மத்திய மாநிலங்களான உத்தரகாண்ட், இமாச்சல் பிரதேசம், கிழக்கு உத்திரப்பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது என்றும் மத்தியப்பிரதேசத்தில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *