இந்தியாவுக்கு மட்டும் இல்ல… சுற்றியுள்ள 21 நாடுகளுக்கும் தலைவலியாக உள்ள சீனா..!!!

Spread the love


லடாக் எல்லையில் இந்தியா-சீனாவிற்கு இடையில் பதற்றம் இன்னும் குறையவில்லை. முக்கிய இராணுவ அதிகாரிகளின் உயர் மட்டக் கூட்டத்திற்குப் பிறகும், இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர உடன்பாடு ஏற்படவில்லை. இதற்கிடையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் ( Chinese President Xi Jinping) தனது துருப்புக்களை போருக்கு தயாராகுமாறு கேட்டுக் கொண்டார். அத்தகைய சூழ்நிலையில், எந்த நேரத்திலும் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் என்ற நிலை உள்ளது. 

சீனாவுக்கு இந்தியாவுடன் மட்டும் தான் எல்லைத் தகராறு என நினைக்க வேண்டாம். சீனாவிற்கு தன்னை சுற்றியுள்ள இந்த 21 நாடுகளுடனும் எல்லை தகராறு உள்ளது. சீனா எத்தனை நாடுகளை எதிர்த்து போர் தொடுக்கும் என தெரியவில்லை.

இந்தியாவைத் தவிர, தைவான் (Taiwan), ரஷ்யா (Russia), ஜப்பான் (Japan), வியட்நாம் (Vietnam) உட்பட மொத்தம் 21 நாடுகளுடன் சீனா (China) எல்லை தகராறு செய்து வருகிறது. இந்தியா உட்பட இந்த 21 நாடுகளுடன் சீனாவுக்கு எல்லை தகராறு உள்ளது.

இந்தியா -சீனா: 

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே 3,488 கி.மீ நீளமுள்ள எல்லை உள்ளது, இதுபோன்ற சூழ்நிலையில் சீனா பல இந்திய பகுதிகளை உரிமை கோருகிறது. லடாக் நிலத்தை 38,000 சதுர கிலோமீட்டர் (அக்சாய் சீனா) சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது, இது மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. இது திபெத்-சின்ஜியாங்கை இணைக்கிறது. சீனா அருணாச்சல பிரதேசத்தை  90,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு ஆக்கிரமித்துள்ளது. 1959 ல் நடந்த திபெத்திய போராட்டத்தின் போது தலாய் லாமாவின் நாடுகடத்தபட்டதை அடுத்து பதற்றம் ஏற்பட்டது. அதன் பிறகு 1962 ல் சீன-இந்தியப் போர் வெடித்தது. லடாக் மற்றும் அருணாச்சல் தொடர்பாக சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே எல்லை தகராறு உள்ளது.

மேலும் படிக்க |  சீன அதிபரை நெருங்கிவிட்டதா சீன வைரஸ்? Xi Jinping-ன் தொடர் இருமலுக்கு என்ன காரணம்?

ஜப்பான்-சீனா தகராறு

தென் சீனக் கடலில் ஜப்பானுடன் சீனாவுக்கு தகராறு உள்ளது. ஜப்பானை சேர்ந்த பகுதியான சென்காகு தீவை சீனா தனது என சொந்தம் கொண்டாடுகிறது.

வட கொரியா-சீனா தகராறு
உலகின் மிக மர்மமான நாடு என்று அழைக்கப்படும் வட கொரியா சீனாவுடன் நெருங்கிய நட்புறவைக் கொண்டுள்ளது, அந்த நாட்டுடன் கூட,  பாயகுடு மலை மற்றும் ஜியாண்டாவோ பகுதி தொடர்பாக சர்ச்சை உள்ளது. வரலாற்று அடிப்படையில் உள்ள தகவல்களை மேற்கோள் காட்டி வட கொரியா அது தனக்கு சொந்தமான பகுதி எனக் கூறி வருகிறது. இரு நாடுகளும் 1416 கி.மீ நீளமுள்ள எல்லையை பகிர்ந்து கொள்கின்றன, எல்லை பகுதி இரண்டு ஆறுகளால் பிரிக்கப்பட்டுள்ளது.

தென் கொரியா-சீனா தகராறு
கிழக்கு சீனக் கடலில் தென் கொரியாவுடன் சீனாவும் தகராறு செய்து வருகிறது. 

ரஷ்யா-சீனா தகராறு

சீனாவும் ரஷ்யாவும் இடையேயும்  எல்லை தகராறு உள்ளது. 1969 ல் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு போரும் நடந்துள்ளது. சீனா ரஷ்யாவுடனான இரண்டாவது மிக நீண்ட எல்லையை 4,300 கிலோமீட்டரில் பகிர்ந்து கொள்கிறது, சீனா 160,000 சதுர கிலோமீட்டர் ரஷ்ய நிலப்பரப்பைக் தனது பகுதி என கூறி வருகிறது. சில மாதங்களுக்கு முன்புதான், ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரத்தை தனது சொந்தமான பகுதி என அறிவித்தது.

நேபாளம்-சீனா தகராறு

சீனாவும் நேபாளமும் 1,415 கி.மீ எல்லையை பகிர்ந்து கொள்கின்றன, இது 1961 ஒப்பந்தத்தின்படி வரையறுக்கப்பட்டுள்ளது. 1788 முதல் 1792 வரை சீன-நேபாளப் போருக்குப் பின்னர் கூட, நேபாளத்தின் சில பகுதிகளை டிராகன்  தனக்கு சொந்தமான பகுதி என கூறி வருகிறது. அந்த பகுதிகள் திபெத்தின் ஒரு பகுதி என்றும், அதனால் சீனாவிற்கு சொந்தமானது என கூறி வருகிறது. இதில் நேபாளத்தின் வடக்கு மாவட்டங்களான கும்லா, ரசுவா, சிந்துபால்சவுக் மற்றும் சங்குவாசபா ஆகியவை அடங்கும். சீனாவும் நேபாளத்தின் எவரெஸ்ட் சிகரத்தை உரிமை கொண்டாடுகிறது. மேலும் 5 ஜி நெட்வொர்க் கருவிகளை அங்கு நிறுவ தயாராகி வருகிறது.

பூட்டான்-சீனா தகராறு

சீனாவிற்கும் பூட்டானுக்கும் இடையிலான புதிய தகராறு கிழக்கு பூட்டானில் உள்ள சாடெங் வனவிலங்கு சரணாலயம் தொடர்பானது. இரு நாடுகளும் சுமார் 470 கி.மீ எல்லையை 495 சதுர கி.மீ பரப்பளவில் பகிர்ந்து கொள்கின்றன.

மேலும் படிக்க |  இந்தியா-சீனா இடையில் நடந்த 7வது கமாண்டர் நிலையிலான கூட்டத்தில் தீர்வு ஏற்பட்டதா..!!!

வியட்நாம்-சீனா தகராறு

சீனாவுக்கும் வியட்நாமுக்கும் இடையே 1,300 கி.மீ நீளமுள்ள எல்லை உள்ளது. வியட்நாமின் பெரும்பகுதியை சீனா வரலாற்று அடிப்படையில் தனக்கு சொந்தம் என்று கூறுகிறது.  மேக்ரிஸ்ஃபீல்ட் கரை, பாரசெல் தீவுகள், தென் சீனக் கடல் மற்றும் ஸ்ப்ராட்லி தீவுகளின் பகுதிகள் மீது இரு நாடுகளுக்கும் அதிகாரம் உள்ளது. வியட்நாம் பல நூற்றாண்டுகளாக சீனாவின் கீழ் இருந்தது, இதன் விளைவாக இரு நாடுகளுக்கு இடையே பல மோதல்களும் போர்களும் ஏற்பட்டன.

புருனே-சீனா தகராறு
தென்சீனக் கடலில் உள்ள சில கடலோர தீவுகள் புருனேவுக்கு சொந்தமானவை. இருப்பினும், இது தனது பிரதேசம் என்று சீனா உணர்கிறது, அதில் முக்கியமாக ஸ்ப்ரைட்லி தீவு அடங்கும்.

தைவான்-சீனா தகராறு
சீனா தைவான் முழுவதும் தனக்கு தான் சொந்தம் என உரிமை கோருகிறது, ஆனால் மேக்டிஸ்பீல்ட் கரை, பார்சல் தீவுகள், ஸ்கார்பாரோ ஷோல், தென் சீனக் கடலின் பகுதிகள், ஸ்ப்ராட்லி தீவுகள் ஆகியவை தொடர்பாக சர்ச்சை உள்ளது

கஜகஸ்தான்-சீனா தகராறு
சீனா (வடமேற்கு மாகாணம் ஷின் ஜியாங்) மற்றும் கஜகஸ்தான் ஆகியவை 1,700 கி.மீ நீளமுள்ள எல்லையை பரஸ்பரம் பகிர்ந்து கொள்கின்றன. கஜகஸ்தான் நாடு,சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில்  உள்ள பகுதியாகும். கஜகஸ்தானின் பல பகுதிகளை சீனா தனக்கு தான் சொந்தம் என கூறுகிறது

கிர்கிஸ்தான்-சீனா தகராறு
கிர்கிஸ்தானின் பெரும்பகுதியின் மீது தனக்கு உரிமை உண்டு என்று சீனா கூறுகிறது, ஏனெனில் 19 ஆம் நூற்றாண்டில் நடந்த போரில் சீனா இந்த பிரதேசத்தை வென்றது. இரு நாடுகளும் 1,063 கி.மீ நீளமுள்ள எல்லையை பரஸ்பரம் பகிர்ந்து கொள்கின்றன.

தஜிகிஸ்தான்-சீனா தகராறு

மேலும் படிக்க | Kim Jong Un சிந்திய கண்ணீர்.. என்னப்பா நடக்குது என வியக்கும் உலகம்..!!!

தஜிகிஸ்தான் முழுவதையும் சீனா வரலாற்று அடிப்படையில் உரிமை கோருகிறது.  சர்ச்சையை  தீர்க்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் தஜிகிஸ்தானில் நடந்து வரும் உள்நாட்டுப் போர் காரணமாக, உறுதியான முடிவு எதுவும் ஏற்படவில்லை.

ஆப்கானிஸ்தான்-சீனா தகராறு

சீனாவிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் 210 கி.மீ நீளமுள்ள எல்லை உள்ளது. 1963 இல் இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட போதிலும், ஆப்கானிஸ்தானின் படாக்ஷன் மாகாணத்தில் சீனா தொடர்ந்து அத்துமீறி அக்கிரமிக்கிறது.

மியான்மர்-சீனா தகராறு
சீனாவும் மியான்மரும் 1960 எல்லை ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2,185 கி.மீ நீளமுள்ள எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. சீனா வரலாற்று ரீதியாக மியான்மரின் சில பகுதிகள் தனக்கு தான் சொந்தம் எனக் கூறுகிறது.

லாவோஸ்-சீனா தகராறு
1991 இல் கையெழுத்திடப்பட்ட எல்லை ஒப்பந்தத்தின் அடிப்படையில் சீனா லாவோஸுடன் 505 கி.மீ எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இருப்பினும், வரலாற்று அடிப்படையில் லாவோஸின் சில பகுதிகளை சீனா உரிமை கொண்டாடுகிறது

மங்கோலியா-சீனா தகராறு

மங்கோலியா சீனாவுடன் 4677 கி.மீ எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. சீனா தனது ஆற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மங்கோலியாவை ஆக்கிரமிக்கிறது. சீனா வரலாற்று ரீதியாக மங்கோலியாவின் சில பகுதிகள் தனக்கு சொந்தனது எனக் கூறுகிறது

திபெத்-சீனா தகராறு
13 ஆம் நூற்றாண்டு முதல் திபெத்தை தனக்கு சொந்தமான என்று சீனா கூறுகிறது. இது திபெத்தின் 12.28 லட்சம் சதுர கி.மீ பரப்பளவைக் கட்டுப்படுத்துகிறது.

இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் – சீனா தகராறு
இந்தியாவுக்குப் பிறகு, சீனா அதிகம் தகர்நறு செய்யும் பகுதி தென் சீன கடல் பகுதி. இது இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூருடன் இது தொடர்பாக தகராறு செய்து வருகிறது.

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *