இந்தியா-சீனா இடையில் நடந்த 7வது கமாண்டர் நிலையிலான கூட்டத்தில் தீர்வு ஏற்பட்டதா..!!!

Spread the love


புதுடெல்லி: அக்டோபர் 12 ம் தேதி சுஷூலில் சுமார் 11 மணி நேரம் நடைபெற்ற ஏழாவது சுற்று கமாண்டர்கள் நிலையிலான கூட்டம் ஆக்கர்பூர்வமாக இருந்ததாக இந்திய ராணுவ வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளன.

அக்டோபர் 12 ஆம் தேதி, இந்தியா-சீனாவின் மூத்த கமாண்டர்கள் நிலையிலான ஏழாவது சுற்று சுஷூலில் நடைபெற்றது. இந்தியா-சீனா எல்லைப் பகுதிகளின் மேற்குத் பிரிவில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடுடன் இரு தரப்பினருக்கும் இடையில்  நேர்மையான கருத்துப் பரிமாற்றம் இருந்ததாக இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

விரைவில் இரு தரப்பினரும் படைகளை விலக்கிக் கொள்வது தொடர்பாக,  பரஸ்பர ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு உண்டாகலாம் என்று இராணுவம் கூறியது.

மேலும், இரு நாடுகளும் எல்லைப் பகுதிகளில், கூட்டாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அமைதியை பராமரிக்கவும் ஒப்புக்கொண்டதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

ALSO READ | நடுக்கடலில் நின்று அடம் பிடிக்கும் சீனா: கடுப்பாகி கண்டிக்கும் ஜப்பான்

அண்மையில், விரிவாக்கப் பேச்சுவார்த்தைகளின் போது சீனா ஒரு அசாதாரண கோரிக்கையை முன்வைத்ததாகக் கூறப்படுகிறது, அதில் இந்திய துருப்புக்கள் பிங்கர் 4 பகுதியில் இருந்து பிங்கர் 2 மற்றும் பிங்கர் 3 பகுதிகளுக்கு இடையிலான பகுதிக்கு சென்று பின்வாங்கினால் தான், சீனா மக்கள் விடுதலை இராணுவம் பங்கோங் த்சோ ஏரியின் வடக்குக் கரையில் பிங்கர் 8 க்கு பின்வாங்கிச் செல்லும் என்றுஎன்று சீனா கோரியதாக கூறப்பட்டது. 

ஆனால், இந்தியா தனது எல்லை பகுதியை தொடர்ந்து வலுப்படுத்தி வருவதோடு,பல ஏவுகணைகளையும் சோதித்து, தனது வலிமையை எடுத்து காட்டியதன் மூலம் தெளிவான செய்தியை சீனாவிற்கு கொடுத்துள்ளது.

மேலும், இந்த மாத தொடக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடி, இமாச்சல பிரதேசத்தின் ரோஹ்தாங்கில் உள்ள அடல் சுரங்கப்பாதையை திறந்து வைத்தார். இதன் காரணமாக லே-லடாக் பகுதி வருடத்தின் 365 நாட்களும், அணுகக் கூடிய இடமாக மாறியுள்ளது. முன்னதாக,  குளிர்காலத்தில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக இந்த பகுதி துண்டிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

எல்.ஐ.சியில் நிறுத்தப்பட்டுள்ள துருப்புக்களுக்கு இப்போது அவசர காலங்களில் எப்போது வேண்டுமானாலும்,  ராணுவ தளவாடங்களையும், பொருட்களையும் வழங்க முடியும். அதனால், இந்த அடல் சுரங்க பாதை ராணுவ ரீயாக மிகவும்  முக்கியத்துவம் வாய்ந்தது.

ALSO READ | Kim Jong Un சிந்திய கண்ணீர்.. என்னப்பா நடக்குது என வியக்கும் உலகம்..!!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYe

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *