இந்த மாதத்துடன் முடிவடையும் கடன் தவணை சலுகையை ரிசர்வ் வங்கி நீட்டிக்குமா?

Spread the love


கொரோனா ஊரடங்கால் தொழில்துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால் பொருளாதாரம் சரிய தொடங்கியது. இதையடுத்து, பொருளாதாரத்தை மீட்கும்நடவடிக்கையாக மத்திய  அரசு பல்வேறு சலுகை திட்டங்களை அறிவித்தது. 

இதன் ஒரு பகுதியாக, ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு மட்டுமின்றி, பல்வேறு கொள்கை முடிவுகளை அறிவித்தது. இதில், கடன் தவணை சலுகையும் அடங்கும்.

வருவாய் குறைந்ததால் நிறுவனங்கள் மட்டுமின்றி, பொதுமக்கள் பலரும் வருவாய் இழந்து அவதிப்பட்டனர். வீடு,வாகன கடன்கள் மற்றும் தனிநபர் கடன் தவணைகளை அடைக்க முடியவில்லை. இதற்காக கடன் தவணை ஒத்திவைப்பு சலுகையை ரிசர்வ் வங்கி அறிவித்தது. முதலில் 3 மாதங்களுக்கு அறிவிக்கப்பட்டஇந்த சலுகை, மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டது. இந்த மாதத்துடன் இந்த கடன் தவணை சலுகை முடிவடைகிறது. 

 கடன் தவணை ஒத்திவைப்பை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், அதற்கு ஏற்பட கூடுதல்  தவணை அல்லது வட்டியை செலுத்த வேண்டியிருக்கும். அல்லது, 6 மாத சலுகை காலம் முடிந்ததும் இந்த நிலுவையை ஈடு செய்ய மாதாந்திர கடன் தவணை தொகையை உயர்த்திக் கொள்ளலாம். 

இதனால் கடனுக்கு கூடுதல் தொகை செலுத்த வேண்டி வந்தாலும்,வருவாய்இல்லாததால் வேறு வழியின்றி நிறுவனங்களும், தனிநபர்கள் பலரும் இந்த சலுகையை பயன்படுத்திக் கொண்டுள்ளனர். குறிப்பாக, தனிநபர் கடன் மட்டுமின்றி,பெரும்பாலான குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் இந்த சலுகையை பயன்படுத்திக் கொண்டுள்ளன.

இந்த சூழ்நிலையில், கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு இயல்பு வாழ்க்கை இன்னும் செல்லவில்லை. அனுமதிக்கப்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் குறைந்த அளவு தொழிலாளர்களை கொண்டே இயங்குகின்றன. இதனால், கடன் தவணை சலுகை மேலும் நீட்டிக்கப்பட வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் படிக்க | நிலுவை வழக்கிலும் ஆன்லைன் விசாரணை.. நோட்டீஸ் அனுப்ப தயாராகிறது வருமானவரித்துறை

ஆனால், ஏற்கெனவே வராக்கடன் சுமையால் தள்ளாட்டத்தில் உள்ள  பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், இந்த சலுகையை நீட்டிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளதாக, வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கடன் தவணை சலுகையை நீட்டிப்பு சலுகையை பல வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். இதனால் வங்கிகளுக்கு வர வேண்டிய கடன் வசூலாகவில்லை. மேலும், இதுபோன்ற தற்காலிக நடவடிக்கைகள் வாடிக்கையாளர்களுக்கு நிரந்தர தீர்வாக அமையாது. 

மாறாக, பணப்புழக்கம் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள்தான் மேற்கொள்ளப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.

Unlock 4.0: மெட்ரோ சேவை, பள்ளி, பொது நிகழ்ச்சிகள், குறித்த வழிகாட்டுதல்கள் என்ன..!!!

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *