இந்த மாநில அரசு ஊழியர்களுக்கு Good News: Salary Cut முடிவை திரும்பப் பெற்றது அரசு!!

Spread the love


உத்தராகண்ட் மாநில ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. COVID-19 காரணமாக, அரசாங்கம் அவர்களது 1 நாள் சம்பளத்தை குறைத்துக்கொண்டிருந்தது. இந்த முடிவை அரசாங்கம் வாபஸ் பெற்றுள்ளது. இருப்பினும் COVID நிதிக்காக IAS, IPS, IFS மற்றும் MLA ஆகியோரின் சம்பளத்தில் குறைப்பு தொடரும்.

மேலும், பதிவு செய்யப்பட்ட வண்டிகள் மற்றும் இ-ரிக்‌ஷாக்களை ஓட்டுபவர்களுக்கு 1000 ரூபாய் வழங்க உத்தராகண்ட் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இந்த தொகை ஓட்டுநர்களுக்கு வழங்கப்பட்டது.

ALSO READ: அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி… மாநில அரசு ஊழியர்களுக்கும் ₹.10,000 முன்பணம் கிடைக்கும்!!

நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் மதன் கௌஷிக் கூறுகையில், ‘பண்டிகை காலம் தொடங்க உள்ளது. எனவே, ஊழியர்களின் 1 நாள் சம்பளத்தைக் குறைப்பதற்கான முடிவு திரும்பப் பெறப்பட்டுள்ளது. ஆனால் முதல்வர், சபாநாயகர், துணை சபாநாயகர், அமைச்சர், எம்.எல்.ஏ, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் ஐ.எஃப்.எஸ் ஆகியோரின் சம்பளம் கழிக்கப்படும்.’ என்றார்.

முன்னதாக, மோடி அரசு (Modi Government) மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு பெரிய பரிசை வழங்கியது. மத்திய அரசு ஊழியர்களின் விடுப்பு பயண கொடுப்பனவை (LTA) அரசாங்கம் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. இதில் மத்திய அரசு ஊழியர்கள் 2022 க்குள் விடுப்பு பயண கொடுப்பனவை (LTA) வடகிழக்கு, லடாக், அந்தமான்-நிக்கோபார் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய இடங்களுக்கு பயணிக்க பயன்படுத்தலாம்.

ஒவ்வொரு 3 வருடங்களுக்கும் ஊழியர்களுக்கு விடுப்பு பயண கொடுப்பனவு வழங்கப்படுகிறது. இதில், ஊழியர்கள் எங்கும் சென்றாலும் பயண உதவித்தொகையை கோரலாம். இதில், ஊழியர்களும் அவர்களது குடும்பத்தினர்களும் ஒன்றாக செல்லலாம்.

பயணத்தில் பல செலவுகள் LTA-வின் தொகையிலிருந்து செலுத்தப்படுகின்றன. இருப்பினும், கொரோனா தொற்றுநோய் காரணமாக இந்த ஆண்டு LTA கிடைக்கவில்லை. இதன் காரணமாகத்தான் அரசாங்கம் 2 ஆண்டுகளாக இதை நீட்டித்துள்ளது. 

ALSO READ: 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கான DA அறிவிப்பு எப்போது?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *