இனி, Google Pay, Paytm செயலிகளை பயன்படுத்தி ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கலாம்

Spread the love


UPI செயலி மூலம் கியூஆர் குறியீட்டை (QR Code) ஸ்கேன் செய்வதன் மூலம் டெபிட் கார்டு இல்லாமல் ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுக்க முடியும். இதற்காக, ஏடிஎம் நிறுவனமான NCR  கார்ப்பரேஷன் அண்மையில் யுபிஐ இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட முதல் அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் முறையை  (Interoperable Cardless Cash Withdrawal -ICCW )  அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏடிஎம்கள் மேம்படுத்தப்படுகின்றன

ICCW அடிப்படையில் இயங்கும் இந்த சிறப்பு ஏடிஎம்களை நிறுவ, சிட்டி யூனியன் வங்கி, NCR கார்ப்பரேஷனுடன் இணைந்துள்ளது. இந்த வசதியை பயன்படுத்தும் வகையில், இதுவரை, 1500 க்கும் மேற்பட்ட ஏடிஎம்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன, மேலும் அதிக ஏடிஎம்களை  மேம்படுத்தும் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன.

புதிய ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுப்பது எப்படி

ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுக்க, முதலில், உங்கள் ஸ்மார்ட்போனில் ஏதேனும் யுபிஐ செயலியை  (GPay, BHIM, Paytm, Phonepe, Amazon) வைத்திருக்க வேண்டும். இதற்குப் பிறகு, ஏடிஎம் திரையில் காட்டப்படும் கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும். ஸ்கேனிங் முடிந்ததும், நீங்கள் கணக்கில் இருந்து எடுக்க வேண்டிய பணத்தை உள்ளிட வேண்டும். பிறகு, உங்களிடம் 4 அல்லது 6 இலக்க யுபிஐ பின் (UPI PIN) கேட்கப்படும், அதன் பிறகு நீங்கள் பணத்தை ஏடிஎம்மில் இருந்து பெறலாம். ஆரம்பத்தில், இது போன்று ஒரு நேரத்தில், ரூ .5,000 மட்டுமே திரும்பப் பெற முடியும்.

ALSO READ | Good news! LPG சிலிண்டரை வெறும் ரூ.9 விலையில் வாங்க அரிய வாய்ப்பு 

யுனிஃபைட் பேமென்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (Unified Payments Interface -UPI) என்பது நிகழ்நேர கட்டண முறையாகும், இதன் மூலம் மொபைல் செயலியின் மூலம் ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்கு உடனடியாக பணத்தை மாற்ற முடியும். இதற்காக, உங்கள் வங்கிக் கணக்கை யுபிஐ செயலியுடன் இணைக்க வேண்டும். நீங்கள் ஒரு யுபிஐ  செயலியின் மூலம் பல வங்கி கணக்குகளை இயக்கலாம் என்பதோடு, நொடிகளில் பணத்தை அனுப்பலாம்.

UPI  கணக்கை உருவாக்குவது எப்படி

யுபிஐ கணக்கை உருவாக்க மேலே குறிப்பிட்ட எந்தவொரு செயலியையும் நீங்கள் பதிவிறக்கலாம். இதற்குப் பிறகு, உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு பதிவு செய்ய வேண்டும். நீங்கள் அதில் உங்கள் கணக்கைச் சேர்த்து, உங்கள் வங்கியின் பெயரை இங்கே தேட வேண்டும். வங்கியின் பெயரைக் கிளிக் செய்த பிறகு, உங்கள் கணக்கைச் சேர்க்க வேண்டும். உங்கள் மொபைல் எண் உங்கள் கணக்கில் இணைக்கப்பட்டிருந்தால், அது திரையில் தோன்றும். பின்னர் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும். இதற்குப் பிறகு, பணம் செலுத்த உங்கள் ஏடிஎம் கார்டின் விவரங்களை கொடுக்க வேண்டும். பின்னர் உங்கள் UPI கணக்கு ஏற்படுத்தப்படும்.

ALSO READ | Today’s Gold Rate: தங்கத்தின் விலையில் சரிவு, மேலும் விலை குறையுமா…

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *