ஊரக பகுதியில் 100% குழாய் நீர் வழங்கும் மோடியின் கனவு திட்டத்தை நனவாக்கிய கோவா..!!!

Spread the love


கிராமப்புறத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் நீர் வழங்கும் மோடியின் கனவு திட்டத்தை நிறைவேற்றிய முதல் மாநிலம்  என்ற பெருமையை கோவா பெற்றுள்ளது

 2.30 லட்சம் வீடுகளை உள்ளடக்கிய கிராமப்புறங்களில் 100 சதவீத குழாய் நீர் இணைப்புகளை வழங்கும் முதல் மாநிலமாக கோவா மாறியுள்ளது என்று நீர் வளத்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. 

மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் என்னும் திட்டம், 2024 க்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் நீரை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

“2.30 லட்சம் கிராமப்புற வீடுகளை உள்ளடக்கிய கிராமப்புறங்களில் 100 சதவீத வீடுகளில், அதாவது அனைத்து வீடுகளுக்கும், தண்ணீருக்கான குழாய் இணைப்புகளை வெற்றிகரமாக வழங்கியுள்ளதால், கோவா நாட்டின் முதல் ‘ஹர் கர் ஜல்’, ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர் சப்ளை செய்யும் மாநிலமாக, ஒரு தனித்துவத்தை பெற்றுள்ளது” என்று நீர் வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும், கிராமப்புற சமூகங்களுக்கு வாழ்க்கையை சுலபமாக்கும், ஜல் ஜீவன் மிஷன் என்னும் திட்டத்தை திறமையாக செயல்படுத்தி,கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், மாநிலத்தில் உள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் இப்போது குழாய் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுவதாக அறிவித்தார்.

ALSO READ | உலகில் இந்திய முஸ்லிம்கள் சகல உரிமைகளுடன் அதிக மகிழ்ச்சியாக உள்ளனர்: RSS தலைவர்

2021 க்குள் கிராமப்புறங்களில் 100 சதவீத குழாய் நீர் இணைப்புகளை வழங்கும் மாநிலத்தின் வருடாந்திர செயல் திட்டம் குறித்து மத்திய நீர் வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், முதல்வருக்கு கடிதம் எழுதி மகிழ்ச்சி தெரிவித்தார்.

இரண்டு மாவட்டங்கள் – 1.65 லட்சம் கிராமப்புற குடும்பங்களைக் கொண்ட வடக்கு கோவா மற்றும் 191 கிராம் பஞ்சாயத்துகளில் 98,000 கிராமப்புற குடும்பங்களுடன் தென் கோவா –  ஆகிய இரு மாவட்டங்களிலும், நூறு சதகித வீடுகளுக்கு குழாய் இணைப்புகள் மூலம் குழாய் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுவதாக அறிவித்தார்.

நீர் சோதனை செய்வதற்கான வசதிகளை வலுப்படுத்த,  ஆய்வகளுக்கான தேசிய அங்கீகார வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற 14 நீர் தர சோதனை ஆய்வகங்களை மாநிலம் பெறுகிறது.

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில், ஒவ்வொரு கிராமத்திலும் ஐந்து பேருக்கு, குறிப்பாக பெண்களுக்கு, தண்ணீரின் தர சோதனை செய்யும் கருவிகளைப் பயன்படுத்துவதில் பயிற்சி அளிக்க வேண்டும், இதனால் அங்கு சப்ளை செய்யும் தண்ணீரைச் சோதிக்க முடியும்.

ALSO READ | பாகிஸ்தான் ISI-க்கு ராணுவ ரகசியங்களை வழங்கிய HAL ஊழியர் கைது..!!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYe

 

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *