எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டால் விளைவுகள் மோசமாகலாம்: கனடாவை எச்சரித்த இந்தியா

Spread the love


புது தில்லி: பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசும் விவசாயிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில் கனேடிய அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக அறிக்கை வெளியிட்டு இது குறித்த பல கருத்துகளையும் தெரிவித்து வருகிறார்.

வெளியுறவு அமைச்சகம் கனேடிய உயர் ஆணையரை வரவழைத்து, கனேடிய அதிபர் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக அறிக்கை வெளியிட்ட விவகாரம் குறித்து கண்டனம் தெரிவித்தது.

கனேடிய உயர் ஆணையர் இன்று வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டதாகவும், இந்திய (India) விவசாயிகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கனேடிய பிரதமர், சில அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் இந்தியாவின் உள் விவகாரங்களில் ஏற்றுக்கொள்ள முடியாத தலையீடாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டதாகவும் ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்தது.

“இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால், இந்தியாவிற்கும் கனடாவிற்கும் (Canada) இடையிலான உறவுகளில் கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும்” என்று அந்த அறிக்கை எச்சரித்தது.

கனேடிய தலைமையின் கருத்துக்கள் கனடாவில் உள்ள இந்தியா தூதரகம் மற்றும் உயர் ஆணையம் முன்னால் போராட்டக்காரர்கள் கூட காரணமானது என்றும் இது பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை எழுப்புகின்றன என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“இந்திய தூதாண்மை பணியாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் முழுமையான பாதுகாப்பை கனேடிய அரசாங்கம் உறுதி செய்யும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். தீவிரவாத செயல்பாட்டை நியாயப்படுத்தும் அறிவிப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும்” என்று இந்திய அரசாங்கம் கூறியது.

ALSO READ: விவசாயிகள் சுதந்திரமாக தொழில் செய்வதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்: நடிகர் கார்த்தி

கனேடிய பிரதமர், இந்த வார தொடக்கத்தில் விவசாயிகள் போராட்டத்திற்கு (Farmers Protest) தனது ஆதரவை வழங்கியபோது, ​​”விவசாயிகளின் எதிர்ப்புக்கள் குறித்து இந்தியாவில் இருந்து வெளிவரும் செய்திகளை பொருட்படுத்தாமல் என்னால் இருக்க முடியாது. நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அங்குள்ளெ அனைவரது குடும்பங்கள் மற்றும் நண்பர்களைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறோம். உங்களில் பலரின் உண்மை என்னவென்று எனக்குத் தெரியும்.” என்று தெரிவித்தார். அவரது பேச்சு இந்தியா முழுவதும் பரவலான எதிர்ப்பை சந்தித்தது.

ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) அரசாங்கமும் கனடாவில் காலிஸ்தானியர்களின் ஆதரவாளராக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா வந்தபோது, ட்ரூடோ காலிஸ்தானியர்களை தூண்டி விட்டு ஆதாயம் தேடுவதற்கு எதிராக மோடி அரசாங்கம் (Modi Government) தனது எதிர்ப்பை பதிவு செய்தது மட்டுமல்லாமல், பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங்கும் கனேடிய பிரதமரின் அரசியல் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

ALSO READ: Farmers Protest: விவசாயிகள் போராட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *