எல்லையில் படைகளைக் குவிக்கும் சீனா: போருக்கான ஆயத்தமா?

Spread the love


லடாக்கில் உள்ள இந்திய சீன எல்லைக் கோடுப் பகுதியான LAC-ல் இந்திய மற்றும் சீன துருப்புக்களுக்கு இடையே நிலவும் பதட்டங்களுக்கு மத்தியில், சீனா LAC அருகே தனது வீரர்களை அதிக எண்ணிக்கையில் நிறுத்தத் தொடங்கியுள்ளது.

திங்களன்று (செப்டம்பர் 7), சுசுலின் முகிரி பகுதிக்குள் ஊடுருவ மக்கள் விடுதலை இராணுவம் (PLA) மெற்கொண்ட முயற்சியை முறியடிப்பதில் இந்திய இராணுவம் (Indian Army) வெற்றி பெற்றது. ஆனால் இதுபோன்ற நடவடிக்கைகளை சீனா வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன.

செப்டம்பர் 1 ம் தேதி, LAC -யில் ரெச்சின் லா அருகே PLA தரைப்படையின் ஒரு பட்டாலியனை சீனா நிறுத்தியதுடன், ஸ்பாங்கூர் ஏரிக்கு அருகில் இரண்டு பட்டாலியன்களையும் நிறுத்தியுள்ளது. இவை அனைத்தும் ஷிக்வானில் உள்ள 62 ஒருங்கிணைந்த ஆயுதப் படையின் ஒரு பகுதியாகும்.

ஆகஸ்ட் 29-30 தேதிகளில் ரெச்சின் லா (Rechin La) மற்றும் ரெசாங் லா ஆகிய பகுதிகளைக் கைப்பற்றுவதில் இந்திய ராணுவம் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிருந்து இந்திய இராணுவம் சீனாவின் (China) மோல்டோ கன்டோன்மென்ட் மீது எளிதாக கண்காணிக்க முடியும். செயலுத்தி ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சிகரங்களை மீண்டும் ஆக்கிரமிக்க PLA துருப்புக்கள் வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருக்கின்றன.

லடாக்கில் (Ladakh) சீனா இரண்டு மோட்டார் துணைகொண்ட பிரிவுகளை நிறுத்தியுள்ளது. 4 வது மோட்டார் பொருத்தப்பட்ட பிரிவு சுஷூலுக்கு முன்னால் நிறுத்தப்பட்டுள்ளது மற்றும் 6 வது மோட்டார் பொருத்தப்பட்ட பிரிவு பாங்காங்கின் மேற்குப் பக்கத்தில் தௌலத் பேக் ஓல்டி பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

ALSO READ: கடத்தப்பட்ட 5 அருணாசல இளைஞர்கள் இங்குதான் உள்ளார்கள்: உறுதிபடுத்தியது சீனா!!

இது தவிர, 4 மோட்டார் பொருத்தப்பட்ட பிரிவுகளின் பட்டாலியன்கள் ஸ்பாங்கூர் இடைவெளியைச் சுற்றி நிலைகளை எடுத்துள்ளன.

இதற்கு பதிலளிக்கும் வகையில், இந்திய இராணுவம் தனது டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களை LAC முழுவதும் பல்வேறு இடங்களில் நிறுத்தியுள்ளது. சீனத் துருப்புக்களிடமிருந்து தாக்குதல் நடக்கக்கூடும் என கருதப்படும் இடங்களில் எல்லாம் இந்திய ராணுவம் தன் படைகளை நிலைநிறுத்தியுள்ளது.

இந்த பகுதியில் பரந்த சமவெளிகள் உள்ளன. அவை டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களின் நடவடிக்கைக்கு நல்லது. இந்த சூழலில் இரு நாடுகளின் படைகளும் இங்கிருந்து பெரிய தாக்குதல்களை நடத்த முடியும்.

மொத்தத்தில் போருக்கான அனைத்து வித ஆயத்தங்களையும் இந்திய சீன ராணுவங்கள் செய்து கொண்டிருக்கின்றன. ஒரு சிறு தூண்டுதல் கூட போரை துவக்கி விடும் என்ற பதட்டமான நிலைதான் தற்போது எல்லையில் நிலவி வருகிறது. 

ALSO READ: சீனாவின் முகத்திரை கிழிந்தது…ஈட்டிகளை ஏந்திய சீன படையினர் புகைப்படம் வெளியீடு..!!

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *