கப்பலைத் தாக்கும் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றி..!!!

Spread the love


புதுடெல்லி: அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளிலிருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணையின் கப்பல் எதிர்ப்பு பதிப்பை இந்திய கடற்படை செவ்வாய்க்கிழமை பரிசோதனை செய்தது. இந்திய கடற்படை நடத்திய சோதனை வெற்றிகரமாக நடந்தது.

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளிலிருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையின் நில-தாக்குதல் அமைப்பும் இந்த வார தொடக்கத்தில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

“பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு  DRDO உருவாக்கிய நிலப்பரப்பை தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணையின் தாக்குதல்  வரம்பு இப்போது 400 கி.மீ.க்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளது,” என்று பாதுகாப்பு வட்டாரங்கள் ANI இடம் தெரிவித்தன.

ALSO READ | பிரம்மபுத்ராவில் அணைகட்ட சீனா திட்டம்… இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்துமா ..!!!

இன்று காலை 9.25 மணிக்கு நடைபெற்ற சோதனையின்போது, ​​300 கி.மீ தூரம் சென்று தாக்க வல்ல, டி.ஆர்.டி.ஓ உருவாக்கிய பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணை,  இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ் ரன்விஜயிடமிருந்து (INS Ranvijay)  ஏவப்பட்டது, அது வெற்றிகரமாக வங்காள விரிகுடாவில் உள்ள கார் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே இருந்த, அதன் இலக்கு கப்பலை தாக்கியது என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணை (BrahMos supersonic cruise missile) அதன் வகுப்பில் உலகின் மிக வேகமாக செயல்படும் அமைப்பாகும். டிஆர்டிஓ சமீபத்தில் ஏவுகணை அமைப்பின் வரம்பை, தற்போதுள்ள 298 கிமீ என்ற அளவில் இருந்து, 450 கிமீ ஆக அதிகரித்துள்ளது.

பிரம்மோஸ் ஏவுகணை  2.8 மாக் (Mach ) வேகம் கொண்டது. அதாவது ஒலியின் வேகத்தை விட மூன்று மடங்கு அதிகம். ரஷ்யா (Russia) மற்றும் இந்தியா இணைந்து, பிரம்மோஸ் ஏவுகணையை காற்று, நிலம் மற்றும் கடல் பரப்புகளை தாக்கும் வகையில் வெற்றிகரமாக ஒருங்கிணைப்பது, உள்நாட்டுமயமாக்கலுக்கான ஒரு பெரிய முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

மேக் இன் இந்தியா திட்டத்திற்கு அரசாங்கம் மீண்டும் மீண்டும் ஊக்குவித்து வருவதோடு,  ‘ஆத்மனிர்பர்’ பாரதத்திற்கான  (Aathmanirbhar Bharat) அதாவது தற்சார்பு இந்தியா என்ற சமீபத்திய பிரச்சாரத்தில் பின்னணியில் இது முக்கியத்துவம் பெறுகிறது.

கடந்த சில மாதங்களாக, இந்தியா நிலம், காற்று மற்றும் கடல் என அனைத்து வித்மாகவும் தொடர்ச்சியான சோதனைகளை நடத்தியது. கிழக்கு லடாக்கில் இந்திய மற்றும் சீன இராணுவம் இடையில் பதற்றம் இன்னும் தீராத நிலையில், இதை  சீன ஆக்கிரமிப்புக்கு எதிராக பரிசோதனைகள் என்ற வகையில் பார்க்கப்படலாம்.

சீன தொடர்ந்து, இந்தியப் பெருங்கடல் பகுதி மற்றும் பசிபிக் பகுதிகளிலும் கடல்சார் சட்டங்களை மீறி, ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் இந்ஹ பரிசோதனைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

ALSO READ | காசி அன்னபூரணி சிலை கனடாவிலிருந்து மீட்கப்பட்டது எப்படி….!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *