கயவனான காதலனால் வைரலான மகளின் படங்கள்: தாய் எடுத்த விபரீத முடிவு!!

Spread the love


ஒரிசாவின் (Odisha) ஜஜ்பூர் மாவட்டத்தில் 48 வயது பெண் ஒருவர் பரிதாபமாக தற்கொலை செய்து கொண்டார். அவரது மகளின் ஆபாசப் படங்கள் (Obscene Pictures) சமூக ஊடகங்களில் வைரலாகி வந்ததாகவும், இதுதான் அவரது தற்கொலைக்குக் (Suicide) காரணம் என்றும் பொலிசார் புதன்கிழமை தெரிவித்தனர்.

இந்த சம்பவம் திங்கள்கிழமை இரவு ஜஜ்பூர் நகர காவல் நிலைய பகுதியில் உள்ள பனாபூர் கிராமத்தில் நடந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பெண்ணின் குடும்பத்தினர் அளித்த போலீஸ் புகாரின் அடிப்படையில், ஆபாச படங்களை சமூக ஊடகங்களில் (Social Media) பதிவேற்றியதற்காக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முக்கிய குற்றவாளியான, பாலசூர் மாவட்டத்தில் உள்ள பவுலங்கா பகுதியில் வசிக்கும் 24 வயதான சுபாங்கர் தாலேய், 17 வயது சிறுமியுடன் காதல் உறவு கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவர் சிறுமியின் சில புகைப்படங்களை எடுத்துள்ளார் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

“சிறுமி டேலியுடன் உடல் ரீதியான உறவை ஏற்படுத்த மறுத்தபோது, ​​அவர், அந்த சிறுமியின் பெயரில் ஒரு போலி அகௌண்டை உருவாக்கி, சிறுமியின் புகைப்படங்களை மார்பிங் செய்து பேஸ்புக்கில் பதிவேற்றினார்.” என்று ஜஜ்பூர் நகர காவல் நிலைய பொறுப்பாளர் மானஸ் ரஞ்சன் சக்ரா கூறினார்.

இந்த படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகிய பின்னர், சிறுமிக்கு ஒரு நண்பரிடமிருந்து அதைப் பற்றி தெரிய வந்தது. பின்னர் அவர் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு இதைப் பற்றி தெரியப் படுத்தினார்.

நடந்தவற்றை சிறுமியின் தாயாரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அவர், அவர்களது வீட்டின் கூரையில் இருந்து தூக்கில் தொங்கியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான சுபாங்கர் தாலேய், குற்றத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்த ஜயதேவ் தாலேய் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம், ஐ.டி சட்டம் மற்றும் போக்ஸோ சட்டம் (POCSO Act) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ALSO READ: திருமணமான பெண்ணை துப்பாக்கி முனையில் கூட்டு பலாத்காரம் செய்த கொடுமை!

இப்படிப்பட்ட தற்கொலைகளுக்கு சமூக சிந்தனையும் ஒரு பெரும் காரணமாக உள்ளது. குறிப்பாக இந்த வழக்கை எடுத்துக்கொண்டால், குற்றம் செய்தது யாரோ, தற்கொலை செய்து கொண்டது யாரோ! சமூகம் என்ன கூறும் என்ற அச்சமே இபப்டிப்பட்ட தற்கொலைகளைத் தூண்டுகிறது. எதுவாயினும், தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது!!

ALSO READ: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உடலை ஏரிக்கு அருகில் வீசிய கொடூரம்!!

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *