கல்வான் மோதல் இந்தியா- சீனா உறவை பெரிதும் பாதித்துள்ளது: அமைச்சர் ஜெய்சங்கர்

Spread the love


ஜூன் மாதம் இந்தோ-சீன எல்லையில் வன்முறை மோதல்கள் தீவிரமான பொது மற்றும் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், உறவில் கடுமையான பதற்றத்தை ஏற்படுத்தியதாகவும் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.

ஜூன் மாதத்தில் இந்திய-சீனா எல்லையில் (Indo-china border) கல்வான் (Galwan) பகுதியில் ஏற்பட்ட வன்முறை மோதல்கள் ஆழ்ந்த பொது மற்றும் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு பெரிதும் மோசமடைந்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்  (S Jaishankar) தெரிவித்தார்.

ஜூன் 15 அன்று கிழக்கு லடாக்கின் (Ladakh) கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட வன்முறை மோதலில் இந்திய ராணுவத்தின் 20 வீரர்கள் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்தது. சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்திலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.

ஆசிய சொசைட்டி நடத்திய டிஜிட்டல் நிகழ்வில் உரையாற்றிய ஜெய்சங்கர், கடந்த 30 ஆண்டுகளில் இந்தியா சீனாவுடன் ஒரு உறவை வளர்த்துக் வந்துள்ளது, இந்த உறவின் அடிப்படையே, எல்லை பகுதியில் அமைதியையும் ஒழுங்கையும் பேணுவதாகும். 1993 முதல், இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில், இராணுவப் படைகளை குறைத்து, அமைதியை ஏற்படுத்தும்  பல ஒப்பந்தங்கள் உள்ளன, மேலும் எல்லைகளை எவ்வாறு பராமரிப்பது மற்றும் எல்லையில் துருப்புக்களை எவ்வாறு நிறுத்துவது என்பதை இந்த ஒப்பந்தங்கள் தீர்மானிக்கின்றன. 

இந்தியா-சீனா இடையேயான உறவு ஒரு முழுமையான கட்டமைப்பாக இருந்தது. இப்போது இந்த ஆண்டு நாம் பார்த்தது என்னவென்றால், இந்த தொடர் ஒப்பந்தங்கள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. எல்லையில் அதிக எண்ணிக்கையிலான சீன துருப்புக்களை நிறுத்துவது இதற்கெல்லாம் நேர் எதிரானது. ஜூன் 15 அன்று கிழக்கு லடாக் பிராந்தியமான கால்வனில் வன்முறை மோதல், இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மிகவும் பாதித்துள்ளது.

ALSO READ | இந்தியாவுக்கு மட்டும் இல்ல… சுற்றியுள்ள 21 நாடுகளுக்கும் தலைவலியாக உள்ள சீனா..!!!

இந்த மிருகத்தனமான சம்பவம், 1975 க்குப் பிறகு நடந்த முதல் நிகழ்வு என்று கூறலாம். இது ஆழ்ந்த பொது, அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உறவுகளையும் கடுமையாக பாதித்துள்ளது. 2018 ஏப்ரலில் வுஹான் உச்சிமாநாட்டிற்குப் பிறகு கடந்த ஆண்டு இதேபோன்ற உச்சிமாநாடு சென்னையில் நடைபெற்றது என்றும், இதன் பின்னணியில் உள்ள முக்கிய நோக்கம் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜிங்பிங்கும் இணைந்து, பரஸ்பரம் நன்மை பயக்கும் விஷயங்களைப் பற்றி பேசுவதாகவும் ஜெய்சங்கர் விளக்கினார்.

ஆனால், இந்த ஆண்டு, 30 ஆண்டு உறவு பாதிக்கும் வகையிலான வன்முறை தாக்குதல் தான நடந்தது  என்று விவரித்தார். சீனா, எல்லையில் ஏன் இந்த தாக்குதலை செய்தது என்ற கேள்விக்கு இது வரை எந்த விளக்கமும் தன்னிடம் இல்லை என்று வெளியுறவு அமைச்சர் கூறினார்.

“இன்று, ஏராளமான வீரர்கள் எல்லைப் பகுதியில் ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள், இது நமக்கு முன் உள்ள மிகவும் கடுமையான பாதுகாப்பு சவால்” என்று அவர் கூறினார்.

ALSO READ | எமர்ஜென்சியை எதிர்த்து Bangkok வீதிகளில் இறங்கிய தாய்லாந்து  மக்கள்…  

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYe

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *