காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டம் குப்பை தொட்டியில் வீசப்படும்: ராகுல் காந்தி

Spread the love


நாடாளுமன்றத்தின் மழைக் கால கூட்டத் தொடரில், தாக்கல் செய்யப்பட்ட மூன்று வேளாண் மசோதாக்களுக்கும் (Farm Bill) குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் (Ram Nath Kovind)  2020, செப்டம்பர் 27, அன்று ஒப்புதல் அளித்தார். 

உழவர் உற்பத்தி, வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா, 2020, விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்திரவாதம் மற்றும் வேளான் சேவைகள் மசோதா, 2020, மற்றும் அத்தியாவசிய பொருட்கள் (திருத்த) மசோதா 2020 ஆகிய மூன்று மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவர் தனது ஒப்புதலை அளித்தார்.

மேலும் படிக்க | கம்யூனிஸ்டுகளுக்கு No Entry… ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிரடி உத்தரவு..!!!

இந்த மசோதாக்கள், விவசாயிகளுக்கு பல அதிகாரங்களை அளிக்கிறது. அதில் மிக முக்கியமாக, அவர்கள் தங்கள் விளை பொருட்களுக்கான, விலையை தாங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம். இதனால், இடைத்தரகர்கள் ஆதிக்கம் செலுத்தும் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில், பஞ்சாபின் மோகா மாவட்டத்தில் பத்னி கலனில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், விவசாய சட்டங்கள் குப்பை தொட்டியில் போடப்படும் என்றார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் என்ன என அவர் கேள்வி எழுப்பினார்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து, ஞாயிற்றுக் கிழமை முதல் மூன்று நாட்கள் ட்ராக்டர் பேரணியை தலைமை தாங்கி நடத்த உள்ளார். 

மேலும் படிக்க | சீனாவின் மூக்கை உடைக்க தயாராக உள்ளது ராணுவமும் விமானப்படையும்..!!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *