காங்கிரஸ் கட்சியில் வலுக்கும் தலைமை பிரச்சனை… கட்சித் தலைமையில் மாற்றமா…!!!

Spread the love


காங்கிரஸ் கட்சியை பொருத்தவரை நேரு குடும்பத்தை தவிர யாருக்கும் வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை என்ற குற்றசாட்டுகள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகின்றன.

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக 2017 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார்.

2019 ஆம் ஆண்டு நடந்த பொது தேர்தலில், காங்கிரஸ் கட்சி படு தோல்வியை சந்தித்தில் இருந்து, தலைமை குறித்து பல விமர்சனங்கள் வைக்கப்பட்டன. 

அதை அடுத்து ராகுல் காந்தி தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். அதன பிறகு சோனியா காந்தி மீண்டும் தலைவராக பொறுப்பேற்றார். ராகுல் காந்திக்கு முன்னதாக, சுமார் 17 ஆண்டுகள் தொடர்ந்து அவர் தலைவர் பதவியை வகித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சியில் கட்சிக்காக உழைப்பவர்கள் குறிப்பாக இளைஞர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படுவதில்லை என்ற குற்றசாட்டு, பல தரப்பிலிருந்து தொடர்ந்து வைக்கப்படுகின்றன.

கட்சித் தலைமையில் மாற்றம் தேவை என்றும், பொருத்தமான தலைவர் இல்லாததால், கட்சி செல்வாக்கை இழந்து வருகிறது எனவும் பல தலைவர்கள் கோரியுள்ளனர். 

மேலும் படிக்க | கட்சித் தலைவர்கள் 100 பேரிடமிருந்து பறந்த கடிதம்.. அதிர்ச்சியில் காங்கிரஸ் தலைமை..!!!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொறுப்புகளை தொடர விரும்பவில்லை என்றும் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் சோனியா காந்திக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. 

காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூடி, புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என திருமதி சோனியா காந்தி கூறியுள்ளதாக, கட்சி வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

மூத்த தலைர்கள் பலர் சோனியா காந்திக்கு ஆதரவாக உள்ளனர். பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங், saத்திஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் ஆகியோர் சோனியா காந்தி தலைவராக தொடர ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தான் அரசியல் நெருக்கடியில் இருந்து தப்பித்து ஆட்சியை காப்பாற்றிக் கொண்ட அம்மாநில முதல்வர் அசோக் கெஹ்லாட், சோனியா காந்தி தலைவர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்றால், ராகுல் காந்தி தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பாக, நேரு குடும்பத்தினர் அல்லாத ஒருவர் தலைவர் பதவிக்கு வந்தாலும், நானும் , சகோதரர் ராகுல் காந்தியும் தொடர்ந்து கட்சிக்காக பணியாற்றுவோம் என பிரியங்கா காந்தி தெரிவித்திருந்தார்.

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *