காசி அன்னபூரணி சிலை கனடாவிலிருந்து மீட்கப்பட்டது எப்படி….!!

Spread the love


திங்களன்று காசிக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, தனது உரையின் போது, ​​கனடாவிலிருந்து  தாய் அன்னபூரணியின் சிலை விரைவில் காசிக்கு வந்து சேரும் என்று கூறினார். அந்த சிலை 100 ஆண்டுகளுக்கு முன்பு சட்டவிரோதமாக அங்கு சென்றது. நவம்பர் 19 அன்று இந்திய கலைஞர் திவ்யா மெஹ்ரா, அவர்கள்,  கனடா அருங்காட்சியகத்தில் உள்ள சிலையை பார்த்த பிறகு, ​​அவர்  அதனை இந்தியாவிற்கு (India) கொண்டு வர வேண்டும் என்ற இந்த விஷயத்தை எழுப்பினார்.

காசியின் ராஜ்காட்டில் தீபோத்ஸவம் தொடக்கி வைத்த, ​​பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) இது தொடர்பான சம்பவத்தை பற்றி குறிப்பிடுகையில், “100 ஆண்டுகளுக்கு முன்பு தாய் அன்னபூரணியின் சிலை சட்டவிரோதமாக கனடா சென்றது. அந்த சிலையை மீண்டும் கொண்டுவருவதற்கான விரைவான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. விரைவில் தாய் அன்னபூரணி தனது உண்மையான வீட்டிற்கு வருவார். இந்த சிலை காசியின் பாரம்பரியமாக இருப்பதால், சிலையை மீண்டும் இங்கு கொண்டு வருவது எங்கள் பொறுப்பு” என்றார்.

காசி அன்னபூரணி சிலையை கனடா (Canada) அரசு நவம்பர் 19 அன்று இந்திய உயர் அதிகாரியிடம் ஒப்படைத்தது. இந்த சிலை கனடாவின் ரெஜினா பல்கலைக்கழகத்தில் இருந்தது. இந்த சிலை அன்னபூர்ணா, காசி கோவிலில் இருந்து திருடப்பட்டதாக நம்பப்படுகிறது. சிலை இப்போது இந்தியாவுக்குக் கொண்டுவரப்படுகிறது.

மெக்கன்சி ஆர்ட் கேலரியில் உள்ள ரெஜினா பல்கலைக்கழகத்தில் காணப்படும் தாய் அன்னபூர்ணயின் சிலை, நவம்பர் 19 அன்று மெய்நிகர் விழாவில் கனடாவில் இந்தியாவின் உயர் அதிகாரிஅஜய் பிசாரியாவிடம், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தாமஸ் சேஸால் சிலை ஒப்படைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக தகவல் கொடுத்தார். மெக்கன்சி ஆர்ட் கேலரி, குளோபல் விவகாரங்கள் கனடா மற்றும் கனடா பார்டர் சர்வீசஸ் ஏஜென்சியின் பிரதிநிதிகளும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

ALSO READ | COVID-19 நிலைமை பற்றி விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்..!!

இந்திய கலைஞரான திவ்யா மெஹ்ரா அருங்காட்சியகத்தில் இந்த சிலையை பார்த்து, அது குறித்த தகவலை சேகரித்தார். 1936 ஆம் ஆண்டில் மெக்கன்சி என்பவர் இந்த சிலையை கேலரியின் தொகுப்பில் சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது. திவ்யா இந்த பிரச்சினையை எழுப்பினார், இது சட்டவிரோதமாக கனடாவுக்கு கொண்டு வரப்பட்டது என்று கூறினார்.

மெக்கன்சி 1913 இல் இந்தியா சென்றார் என்று ஆராய்ச்சி மூலம் தெரியவந்தது. சிலை இங்கிருந்து கனடாவை அடைந்தது.  அன்னை அன்னபூரணியின் சிலையில் அன்னை கையில் கரண்டியை வைத்துக் கொண்டிருக்கிறார்.

பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த சிலை இந்தியாவிற்கு வருவது அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

ALSO READ | COVID-19 நிலைமை பற்றி விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்..!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *