காதலியை பார்க்கச் சென்ற காதலனை அடித்தே கொன்ற உறவினர்கள்!!

Spread the love


அசாம்கர்: காதல் ஜோடிகளுக்கு தாலிபான் பாணியில் கொடூரமாக தண்டனைகள் வழங்கப்படும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தினமும் இதுபோன்ற சம்பவங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வெளிவருகின்றன, இப்படிப்பட்ட சம்பவங்கள் நம் மனதை நடுங்க வைக்கின்றன. இதுபோன்ற ஒரு சம்பவம் பற்றி சமீபத்தில் உத்தரபிரதேசத்திலிருந்து (Uttar Pradesh) தெரிய வந்துள்ளது. அஸம்கரில் (Azamgarh) இரவின் இருட்டில் காதலியைச் சந்திக்க சென்ற காதலனை, அந்தப் பெண்ணின் உறவினர்கள் கட்டைகள், குச்சிகள் என கையில் கிடைத்தவற்றால் அடித்து கொடூரமாகத் தாக்கியுள்ளார்கள்.

தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்தை அடைந்தபோது, ​​குற்றம் சாட்டப்பட்டவர்கள் அங்கிருந்து தப்பினர். அதன்பிறகு காவல்துறையினர் (Policemen) கயிற்றை கழட்டி மிக மோசமான நிலையில் தாக்கப்பட்டிருந்த அந்த இளைஞனை மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இந்த சம்பவத்தின் காரணமாக, முழு கிராமத்திலும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதன் காரணமாக கிராமத்தில் பலத்த போலீஸ் படை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கப்தங்கஞ்ச் காவல் நிலைய பகுதியில் உள்ள சென்வாடா கிராமத்தின் தலித் காலனியின் நடந்துள்ளது.

ALSO READ: 90 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 33 வயது இளைஞன்: மனித உருவில் மிருகங்கள் உலவும் உலகம்!!

இறந்த இளைஞர் மனிஷ் ராம் (25) தனது சொந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இருவரும் தொலைபேசியில் அவ்வப்போது உரையாடியதுடன், நேரிலும் சந்தித்து வந்தனர். இருவரின் குடும்பத்தினருக்கும் இதைப் பற்றி தெரிய வந்தது. அந்த இளைஞனின் வீட்டார், பெண்ணிடமிருந்து அவரை விலக்கி வைக்க, அந்த இளைஞரை மும்பைக்கு அனுப்பினர். இருந்தாலும், இருவருக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் தொடர்ந்தது. ஆனால் தனது காதலியை சந்திக்க வேண்டும் என்ற ஏக்கத்தில் இருந்த காதலனால், மும்பையில் நீண்ட நாட்களுக்கு தாக்குப்பிடிக்க முடியவில்லை. அவர் மீண்டும் கிராமத்திற்கு வந்து ரகசியமாக தனது காதலியை சந்திக்க ஆரம்பித்தார்.

குடும்பத்தினருக்கு இது தெரிந்தவுடன், அவர்கள் அந்த இளைஞனை பெண்ணின் வாழ்க்கையிலிருந்து அகற்ற முடிவு செய்து அவரைக் கொல்ல சதி செய்தனர். நேற்றிரவு, இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்க வந்தபோது, ​​உறவினர்கள் அந்த இளைஞனை பிணைக் கைதிகளாக அழைத்துச் சென்று கை, கால்களைக் கட்டிப்போட்டனர். வாயை ஒரு துணியால் மூடி அவரை கடுமையாக அடித்தனர். அவர் இதில் தன் சுய நினைவை இழந்தார்.

இதற்கிடையில், யாரோ ஒருவர் இந்த சம்பவம் குறித்து இளைஞரின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் உடனடியாக போலீஸை அழைத்து சம்பவ இடத்தை அடைந்தனர்.

இருப்பினும், இளைஞனை மீட்பதற்காக காவல்துறை அந்த இடத்தை அடைந்த நேரத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர். அதன்பிறகு அந்த இளைஞன் மிகவும் தீவிரமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறிது நேரத்தில் அவர் இறந்தார்.

இந்த வழக்கில், அந்த இளைஞனின் காதலி உட்பட ஐந்து பேர் விசாரிக்கப்படுகிறார்கள். அதே நேரத்தில், ஆதாரங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து கைது செய்யப்போவதாக போலீசார் கூறியுள்ளனர்.

ALSO READ: 20 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி கரஸ்பாண்டண்ட்!!

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *