கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா அசத்துகிறது என Bill Gates புகழாரம்..!!!

Spread the love


புதுடெல்லி: கோவிட் -19 க்கு  (COVID-19) எதிரான போராட்டத்தில் இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி திறன்  மிக முக்கியமானதாக இருக்கும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் (Bill Gates) தெரிவித்தார்.

இந்தியா, கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மிக சிறப்பாக செயல்படுகிறது என்றும் ஆராய்ச்சி, COVID-19 ஐ எதிர்த்துப் போராடுவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்  பாராட்டியுள்ளார்.

பெரும் சாவல்கள் என்பது குறித்த வருடாந்திர கூட்டம் 2020 இல் உரையாற்றும் போது, ​​கோவிட் -19 இன் தடுப்பு மருந்து கண்டறிதல் மற்றும் நோயறிதலில்  ஆகியவற்றில் உள்ள பிரச்சனைகள் குறித்து பில் கேட்ஸ் (Bill Gates) விவாதித்தார்.

அமெரிக்காவின் (America) புகழ்பெற்ற வர்த்தகரான பில் கேட்ஸ், கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்தியா தனது மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பெரும் முன்னேற்றத்தை கண்டுள்ளது என்றும், இந்தியாவின் செயல்பாடுகள் மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது என்றார்.

“இப்போது, ​​இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி நடவடிக்கைகள் COVID-19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கு முக்கியமானதாக இருக்கும், குறிப்பாக பெரிய அளவில் தடுப்பு மருந்துகளை தயாரிக்கும் போது அதில், இந்தியாவிற்கு மிக முக்கிய பங்கு இருக்கும்,” என்று அவர் கூறினார்.

உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் தற்போதைய கொரோனா வைரஸ்  (Corona virus)  தொற்று நோயை முடிவுக்கு கொண்டு வர பெரும் சவாலான விஷயத்தில் ஈடுபட்டுள்ளனர்  என்று கேட்ஸ் கூறினார்.

மரபணு ஆராய்ச்சியில் mRNA தொடர்பான ஆராய்ச்சி மேம்படும் எனவும், இதன் மூலம் தடுப்பு மருந்து குறைந்த செலவில் தயாரிக்கப்படுவதோடு, குளிரூட்டப்பட்ட பெட்டிகள் சப்ளை செய்ய வேண்டும் என்ற தேவையையும் அது குறைக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

ALSO READ | ஹைதராபாத் சட்ட மாணவி 4042 அரிசியில் பகவத் கீதை எழுதி சாதனை..!!!

“சில நேரங்களில் மக்களை பரிசோதிக்கும் போது, மிக குறைந்த அளவில் தொற்று இருக்கும் போது, அவர்களுக்கு நடத்தப்படும் பரிசோதனை முடிவுகள்  நெகடிவ் என வருவதால், அது போன்ற சூழ்நிலை, தொற்று நோய் பரவ காரணமாக உள்ளது,” என்று அவர் கூறினார்.

இது போன்ற நோயறிதல்களில் உள்ள பிரச்சனைகள் இன்னும் நீடிக்கிறது, இதனால் நோயறிதல் சோதனை இன்னும் நவீனமாக்கும் தேவை உள்ளது எனக் குறிப்பிட்டார்.

சர்வதேச விஞ்ஞானிகள் குழுக்கள் தடுப்பூசி மருத்துவ பரிசோதனைகளில் முழு வேகத்துடன் ஒத்துழைக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

“இந்த தடுப்பூசிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கிடைக்கும், மேலும் பல வகை தடுப்பூசிகள் இருப்பதால், அவை ஒவ்வொன்றையும் எவ்வாறு சரியாக, எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்” என்று அவர் கூறினார்.

தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் அறிவியலின் வேகம் குறிப்பிடத்தக்கதாக உள்ளது என்று கேட்ஸ் குறிப்பிட்டார்.

“இந்த வைரஸ் உலக பொருளாதாரத்தை பெரிது பாதித்துள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம்,” என்று அவர் கூறினார்.

ALSO READ | ITR தாக்கல் செய்கிறீர்களா… அதற்கு முன் வரியை சேமிக்கும் 11 வழிகளை அறிந்து கொள்ளவும்..!!

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *