கொரோனாவை வென்ற Amitabh Bachchan ‘Kaun Banega Crorepati 12 படப்பிடிப்பில்!!!

Spread the love


புதுடெல்லி: கொரோனா பாதிப்பால் பல நாட்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 77 வயது அமிதாப் பச்சன் தனது அடுத்த இன்னிங்ஸை அதிரடியாக தொடங்கிவிட்டது. அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ‘Kaun Banega Crorepati’   தொலைகாட்சி நிகழ்ச்சியின் 12வது பதிப்பில் நடித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2000ஆம் ஆண்டில் முதன்முதலில் ஒளிபரப்பப்பட்ட ‘கே.பி.சி’ இப்போது இரண்டு தசாப்தங்கள் பயணித்து தற்போது 12வது சீசனுக்குள் நுழைந்துள்ளது. நிகழ்ச்சியின் தொகுப்பிலிருந்து ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள பிக் பி, ” பி.பி.ஈ என்ற நீலக் கடலில் இருந்து மீண்டு, மீண்டும் வேலைக்கு திரும்பிவிட்டேன்…. கேபிசி 12 .. 2000ஆம் ஆண்டில் தொடங்கியது .. இன்று ஆண்டு 2020 .. 20 ஆண்டுகள்! ஆச்சரியம் .. இதுதான் வாழ்க்கை” என்று பொருள்படும் வாசகங்களை எழுதியுள்ளார்.

அமிதாப் பச்சன் சமீபத்தில் கொரோனா வைரஸிலிருந்து மீண்டார். தனது வலைப்பதிவில், படப்பிடிப்பு போது குழு அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

”பலத்த கட்டுப்பாடுகளுடன், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது .. மனம் லேசாக இருக்கிறது. வழக்கமாகவே பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.  ஆனால் இந்த முறை அது மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளது தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். எந்தவித நெகிழ்ச்சியும் இல்லை. வேலையை மட்டும் செய்துவிட்டு, செல்கிறேன்”என்று 77 வயதான மெகாஸ்டார் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மே மாதத்தில் இருந்தே பிக் பி ‘கேபிசி 12’ இல் வேலை செய்யத் தொடங்கினார். ஆனால் வீட்டில் இருந்தே வேலைகளில் ஈடுபட்டா. இருப்பினும், ஜூலை மாதம், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு, மூன்று வாரங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

சில நாட்களுக்கு முன்பு, ‘அதிகபட்ச பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன்’ ‘கே.பி.சி 12’ படப்பிடிப்பை மீண்டும் தொடங்கத் தயாராகி வருவதாக மெகாஸ்டார் அமிதாப் பச்சன் தெரிவித்திருந்தார்.

‘Who Wants To Be a Millionaire?’ என்ற பிரிட்டிஷ் நிகழ்ச்சியின் மறுவடிவம் தான் ஹிந்தியில் தயாரிக்கப்ப்ட்ட ‘Kaun Banega Crorepati’ நிகழ்ச்சியாகும்.  தற்போது இந்தியாவின் பலமொழிகளிலும் கோடீஸ்வரன் மற்றும் கோடீஸ்வரி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.  அவை பலரையும் கவர்வதாக இருக்கின்றன.

Also Read | தனது காதல் விவகாரத்தை வெளிப்படுத்திய Zee News மீது தாவூத் இப்ராஹிம் நடவடிக்கை!!

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *