கொரோனா தடுப்பு மருந்தில் சிக்கலா…100 கோடி இழப்பீடு கோரி வழக்கு பதிவு செய்த SII ..!!!

Spread the love


கோவிட் -19 தடுப்பூசி பரிசோதனை மற்றும் தயாரிப்புகளுக்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், சீரம் இன்ஸ்டிட்யூட் நடத்திய பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் பதிந்துள்ள வழக்கு தொடர்பாக வல்லுநர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கோவிஷீல்ட் (Covishield) தடுப்புபூசி பரிசோதனையில் பங்கேற்ற சென்னையைச் சேர்ந்த 40 வயதான தன்னார்வலர் நவம்பர் 21 ம் தேதி, சீரம் இன்ஸ்டிட்யூட்டிற்கு எதிராக  வழக்கு பதவி செய்தார். அதில் அவர் கோவிஷீல்ட் தடுப்பூசி எடுத்துக் கொண்ட பிறகு. முதல் 10 நாட்களுக்கு எந்தவிதமான பாதகமான எதிர்வினையும் இல்லை என்று கூறிய அந்த தன்னார்வலர், ஆனால் 11 வது நாளில், நினைவாற்றல் இழப்பு, மன நல சிக்கல் மற்றும் நரம்பியல் பிரச்சனைகள் ஏற்பாடுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்

தடுப்பு மருந்து பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர், ஐ.சி.எம்.ஆர் (ICMR), டி.சி.ஜி.ஐ, அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்களுக்கு தடுப்பூசி பரிசோதனை, உற்பத்தி மற்றும் விநியோகத்தை நிறுத்த என்ற நோட்டீஸ் அனுப்பியிருந்தார். 

இது குறித்து கருத்து தெரிவித்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII) தடுப்பு மருந்து சோதனையில் பங்கேற்ற தன்னார்வலரின் மருத்துவ நிலை குறித்து அனுதாபம் கொண்டிருந்தாலும், தடுப்பூசி சோதனைக்கும் தன்னார்வலரின் மருத்துவ நிலைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. இதை முழுமையாக அறிந்திருந்தும், கோவிட் தடுப்பூசி குறித்து பொய்யாக குற்றம் சாட்டுகிறார்,” SII ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தன்னார்வலர், தடுப்பூசி சோதனையிலிருந்து அவர் சந்தித்த சிக்கல்கள் தனிப்பட்ட காரணங்களால் ஏற்பட்டது என்றும், அதற்கும் கொரோனா தடுப்பு மருந்துக்கும் சம்பந்தம் இல்லை என்றும், அதைப் பற்றி  முழுமையாக அறிந்திருந்தாலும், நிறுவனத்தின் நற்பெயரைக் கெடுப்பதற்காக அவர் புகார் அளித்துள்ளார் என்று க்கூறிய சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா, இதற்காக 100 கோடி இழப்பீடு கோரி வழக்கு பதிந்துள்ளது

இது குறித்து கருத்து தெரிவித்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR), இது தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயம் என்றும், இந்திய மருத்து கட்டுபாட்டு அமைப்பி எடுக்கும் முடிவிற்காக காத்திருக்கிறது எனக் கூறியுள்ளது.  குறித்த முடிவு காத்திருக்கிறது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. 

ALSO READ | கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் 3 அணிகளுடன் நாளை பிரதமர் மோடி ஆலோசனை
 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *