கோவாவில் ரேவ் பார்ட்டி நடத்திய 23 பேர் பல வெளிநாட்டினர் உட்பட கைது செய்யப்பட்டனர்

Spread the love


பனாஜி: வடக்கு கோவா (Goa) மாவட்டத்தின் குற்றப்பிரிவு சனிக்கிழமை இரவு ஒரு விருந்தில் பார்ட்டி நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. அந்த விருந்தில் கலந்துக்கொண்ட பலர் போதைப்பொருள் உட்கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் மூன்று வெளிநாட்டினர் உட்பட 23 பேரை போலீசார் கைது செய்தனர். கொரோனா (Covid-19 Pandemic) காலத்தில் விதிகளை மீறி இவர்கள் செயல்பட்டு உள்ளனர். 

கைது செய்யப்பட்ட பெண்களில் இருவர் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள். ஒருவர் செக் குடியரசு நாட்டை சேர்ந்தவர்கள் என்று குற்றப்பிரிவின் (Crime Branch) மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். என்.டி.பி.எஸ் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட பொருட்கள் வைத்திருந்த இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சோதனையின்போது, ​​ஒரு பெரிய அளவிலான போதைப்பொருட்களை போலீசார் கைபற்றியுள்ளனர். அதன் விலை 9 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது.

விருந்து (Rave Party) ஏற்பாடு செய்த இந்திய குடிமகனும் என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் அதிகாரி மேலும் தெரிவித்தார். சமூக தூர விதிகளை பின்பற்றாத விருந்தில் கலந்து கொண்ட மேலும் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் விடுமுறைக்காக கோவா மாநிலத்திற்கு வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆவார்கள்.

ALSO READ | பட்டபகலில் பூங்காவில் நிர்வாணமாக செக்ஸில் ஈடுபட்ட பெண் கைது! காரணம்?

ஒரு ட்வீட்டில், கோவா காவல்துறை அதிகாரி முகேஷ்குமார் மீனா கூறுகையில், “போதைப்பொருட்களை சகித்துக் கொள்ளக் கூடாது என்ற கொள்கையின் ஒரு பகுதியாக கோவா காவல்துறையின் குற்றப்பிரிவு, அஞ்சுனாவில் இரவில் நடந்த விருந்தில் சோதனை மேற்கொண்டு மூன்று வெளிநாட்டினர் உட்பட 23 பேர் கைது செய்யப்பட்டு ஒன்பது லட்சம் ரூபாய்க்கும் அதிகமான போதை மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன என ட்வீட் செய்துள்ளார்.

அதே நேரத்தில், சியோலிம் தொகுதியைச் சேர்ந்த கோவா ஃபார்வர்ட் கட்சி எம்.எல்.ஏ வினோத் பாலியேகர், கடலோரப் பகுதியில் உள்ள பார்ட்டி என்ற பெயரில் கண்மூடித்தனமான போதை சப்ளைய நடந்து கொண்டிருப்பதாகக் கூறினார். இதற்காக உள்ளூர் காவல் நிலையங்களுக்கு லஞ்சம் கொடுக்கப்படுவதாக அவர் கூறினார். 

ALSO READ | பிரபலமான பெயின்கில்லர் மாத்திரைகள் உட்பட 328 மருந்துகளுக்கு தடை…!

எம்.எல்.ஏ தனது பேஸ்புக் பதிவில், ‘இன்ஸ்பெக்டர் உட்பட அஞ்சுனா காவல் நிலையத்தை முற்றிலுமாக மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. முதலமைச்சர் சாவந்தின் (Pramod Sawant) முழு கவனம் சுரங்க போக்குவரத்தில் இருப்பதால் மாநிலத்திற்கு முழுநேர உள்துறை அமைச்சர் தேவை. பாஜக எம்எல்ஏ மைக்கேல் லோபோ உள்துறை அமைச்சராக சிறப்பாக செயல்படுவார் எனக் கூறியுள்ளார்.

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *