சட்டவிரோதமாக குடியேறிய ரோஹிங்கியாக்களை நாடு கடத்தலாம்: உச்ச நீதிமன்றம்

Spread the love


கடந்த 2017 ஆம் ஆண்டு, மியான்மர் நாட்டில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது ராணுவம் தாக்குதலை நடத்தியதை தொடர்ந்து வெடித்த வன்முறையில், லட்சக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்க தேசத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர்.  ரோஹிங்க்யா முஸ்லிகள் வங்க தேசத்தில் இருந்து சட்டவிரோதமாகஇந்தியாவுக்குள் நுழைந்து பல்வேறு மாநிலங்களில் வாழ்ந்து வருகின்றனர். உரிய ஆவணங்கள் ஏதும் இன்றி சட்டவிரோதமாக இந்தியாவின் பல மாநிலங்களில் ரோஹிங்க்யா முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த மாதம் 7-ம் தேதி ஜம்முகாஷ்மீரில் அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் உரிய ஆவணங்கள் ஏதும் இன்றி 170 ரோஹிங்கியா முஸ்லிம்கள்  சட்டவிரோதமாக வசித்து வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தது, அவர்கள் அனைவரும் ஜம்முவில் உள்ள முகாமுக்கு கொண்டு சென்றனர். இவர்களை  மீண்டும் மியான்மருக்கு அனுப்பிவைக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வந்தது.

இவர்களுக்கு ஆதரவாக களம் இறங்கிய வழக்கறிஞர் பிராசாத் பூஷண் ஜம்முவில் 170 ரோஹிங்கியா முஸ்லிம்களை இந்திய அரசு சட்டவிரோதமாக கைது செய்துள்ளது என்றும் அவர்களை அவர்களது சொந்த நாடான மியான்மாருக்கு அனுப்பினால், அவர்கள் உயிருக்கு உத்தரவாதமில்லை என்பதால், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழ்ங்க வேண்டும் எனக் கோரினார்.  மேலும் , ஐ.நா மனித உரிமை அமைப்பு கூறியுள்ளபடி  சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ள அந்த  ‘அகதிகளை’ இந்தியா மியான்மாருக்கு நாடு கடத்தாமல், இந்தியாவில் இருக்க அனுமதிக்க வேண்டும் என்றும்,  சட்ட பிரிவு 21 -ன் கீழ் இந்திய குடியுரிமையை அவர்களுக்கு  வழங்க வேண்டும்  என்று மனு தாக்கல் செய்திருந்தார்.

 இந்தியாவில் – குறிப்பாக ஜம்முவில் சட்டவிரோதமாக குடியேறியிருக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்களை காக்கும் நோக்கில் வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் இந்த வழக்கை தொடர்ந்தார். 

இந்த மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி ஷரத் ஏ. போப்டே தலைமையிலான அமர்வு ,ரோஹிங்கியா அகதிகளை  விடுவிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை ஏற்றுக்கொள்வது சாத்தியமில்லை என தெரிவித்தனர்.

அதேசமயம் உரிய நடைமுறைகள் பின்பற்றி, அவர்களை நாடு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் வரை  ஜம்முவில் உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் நாடு கடத்தப்பட மாட்டார்கள் என்றும் அதிகாரிகளீடம் நீதிபதிகள் தெளிவுப்படுத்தினர்.

ALSO READ | சட்ட விரோத குடியேறிகளின் தலைநகராக இந்தியா இருக்க முடியாது: மத்திய அரசு

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *