சண்டை நிறுத்தத்தை மீறும் பாகிஸ்தான்.. பூன்ச் பகுதியில் மீண்டும் தாக்குதல்..!!!

Spread the love


பூன்ச் மாவட்டத்தில் டெக்வார் மற்றும் மால்டி துறைகளில் சிறிய ஆயுதங்களுடன் துப்பாக்கிச் சூடு மற்றும் தீவிரமான ஷெல் தாக்குதல்களை நடத்தி வருவதன் மூலம் பாக்கிஸ்தான்  சண்டை நிறுத்தத்தை மீறியுள்ளது

 ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 28) இரவு பாகிஸ்தான் துருப்புக்கள் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில், முன்னணி இடங்களில்  கடுமையான ஷெல் தாக்குதல்களை மேற்கொண்டு போர்நிறுத்தத்தை மீறியதாக பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்திய ராணுவம் கடுமையாக பதிலடி கொடுக்கிறது, என்றும் அவர் கூறினார்.

“இரவு 10 மணியளவில், டெக்வார் மற்றும் மால்டி துறைகளில் சிறிய ஆயுதங்களுடன் துப்பாக்கிச் சூடு மற்றும் தீவிரமான ஷெல் தாக்குதல்களால் பாகிஸ்தான் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி வருகிறது” என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

கடைசியாக அறிக்கைகள் வந்தபோது, தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதுவரை இந்திய தரப்பில் எந்தவிதமான சேதமும் ஏற்பட்டதாக எந்த அறிக்கையும் இல்லை.

நான்கு நாட்களுக்கு முன் ஜம்மு-காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில்  உள்ள எல்லை கட்டுபாட்டு பகுதியில், பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தை மீறி துப்பாக்கி சூடு நடத்தியது.

இதற்கு ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.

ஜம்முவின் இந்திரேஷ்வர் நகர் பகுதியில் ஆகஸ்ட் 21-22 தேதிகளில் பாகிஸ்தான் துருப்புக்கள் துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர், மேலும் எல்லைப் பாதுகாப்புப் படை அதற்கு பதிலடி கொடுத்ததாக ANI தெரிவித்தது. 

மேலும் படிக்க | எல்லையில் சண்டை நிறுத்தத்தை மீறும் பாகிஸ்தான்… ராணுவம் தக்க பதிலடி…!!!

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *