சந்தைகளில் பின்பற்ற கூடிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு!!

Spread the love


சந்தையில் கூட்டநெரிசல் இல்லாத நேரங்களில் பொருள்கள் வாங்கினால் சலுகை வழங்கப்படும் என அறிவிக்கலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது!!

சந்தையில் கூட்டநெரிசல் இல்லாத நேரங்களில் பொருள்கள் வாங்கினால் சலுகை வழங்கப்படும் என அறிவிக்கலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் (Minitry of health and Family Welfare) தெரிவித்துள்ளது. சந்தை, கடைகள் உள்ளிட்ட இடங்களில் நுழைவதற்கும், வெளியே செல்வதற்கும் தனித்தனி வழிகளை பின்பற்றலாம் எனவும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய காதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் (Coronavirus) பரவுவதை தடுக்க பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் திங்களன்று புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டதுடன், மறு உத்தரவு வரும் வரை கட்டுப்பாட்டு மண்டலத்தில் உள்ள சந்தைகள் (Market Place) மூடப்படும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது. 

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, சந்தை இடங்களில் தடுப்பு (Social Distancing) நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு புதிய SOP-களை வெளியிட்டது. “கட்டுப்பாட்டு மண்டலங்களில் சந்தை இடங்கள் மூடப்படாமல் இருக்கும். கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ளவர்கள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுவார்கள் ”என்று மையத்தின் அறிவிப்பு குறிப்பிட்டது.

ALSO READ | கொரோனா வைரஸ் மூக்கு வழியாக மூளைக்குள் நுழையக்கூடும்: புதிய ஆய்வு..!

மையத்தின் புதிய வழிகாட்டுதல்களின்படி, கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே சந்தைகள் செயல்பட அனுமதிக்கப்படும். இருப்பினும், பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளில் உள்ளவர்கள் (65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கொமொர்பிடிட்டி உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள்) வீட்டிலேயே தங்கி அத்தியாவசிய நோக்கங்களுக்காக மட்டுமே வெளியேற வேண்டும் என்று மையம் வலியுறுத்தியுள்ளது.

புதிய வழிகாட்டுதல்களின்படி, அதிக ஆபத்து உள்ள பிரிவுகளின் கீழ் உள்ள கடை ஊழியர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் மற்றும் பொதுமக்களுடன் நேரடி தொடர்பு சம்பந்தப்பட்ட எந்தவொரு வேலையிலிருந்தும் விலகி இருக்க வேண்டும் என்று மையம் கூறியது.

மேலும், சந்தை, கடைகள் உள்ளிட்ட இடங்களில் நுழைவதற்கும், வெளியே செல்வதற்கும் தனித்தனி வழிகளை பின்பற்றலாம், சந்தையில் கூட்டநெரிசல் இல்லாத நேரங்களில் பொருள்கள் வாங்கினால் சலுகை வழங்கப்படும் என அறிவிக்கலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *