சமூகத் தீமைகளால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்ட சிறுமி!! உ.பி.-யில் பரிதாபம்!!

Spread the love


பரேலி: மாசுபாடு மற்றும் ஊழல் போன்ற சமூக தீமைகள் அதிகரித்து வருவதால் பதற்றமடைந்த ஒரு 16 வயது சிறுமி தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதத்தை எழுதி வைத்து விட்டு அந்த சிறுமி தன்னைத் தானே தலையில் சுட்டுக் கொண்டார்.

உத்தரபிரதேசத்தின் (Uttar Pradesh) சம்பலில் சுதந்திர தினத்திற்கு முன் தின்பம் இந்த சம்பவம் நடந்தது. இவர் பாப்ராலாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தார். 18 பக்க தற்கொலைக் குறிப்பை (Suicide Note) அவர் விட்டுச் சென்றார். அதில் பிரதமர் மோடியைச் சந்திக்க தான் விரும்பியதாகவும் அவர் கூறியிருந்தார்.

தற்கொலைக் குறிப்பில், 16 வயது சிறுமி, மாசுபாடு, ஊழல் மற்றும் காடுகள் அழிக்கப்படுவது குறித்து கவலையை எழுப்பியுள்ளார். அதிகரித்து வரும் சமூக தீமைகளால் தான் கலக்கம் அடைந்ததாக சிறுமி கூறினார். தற்கொலைக் குறிப்பில், பிரதமர் மோடியுடன் மேற்கூறிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க விரும்புவதாகவும் சிறுமி குறிப்பிட்டுள்ளார்.

தனது தற்கொலைக் குறிப்பில், அதிகரித்து வரும் மக்கள் தொகையைக் (Population)  கட்டுப்படுத்தவும், தீபாவளியின்போது பட்டாசுகளைத் தடை செய்யவும் பிரதமர் மோடியை அந்த பெண் கேட்டுக்கொண்டுள்ளார். ஹோலியில் பயன்படுத்தப்படும் ரசாயன அடிப்படையிலான வண்ணங்களுக்கும் தடை விதிக்கப்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

நாட்டில் வயதானவர்கள் நடத்தப்படும் விதம் குறித்தும் சிறுமி கவலைகளை எழுப்பியுள்ளார். “குழந்தைகள் பெற்றோரை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பும் இடத்தில் நான் இனி வாழ விரும்பவில்லை” என்று அவர் எழுதியுள்ளார்.

ALSO READ: இறந்த முதலாளியின் கிரெடிட் கார்டை திருடி பணம் எடுத்த பணிப்பெண்!!

குன்னௌரின் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி (SHO) தேவேந்திர குமார், “ஆகஸ்ட் 14 ஆம் தேதி இரவு சிறுமி தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். ரிவால்வர் போலீசாரால் மீட்கப்பட்டது மற்றும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.” என்று தெரிவித்தார்.

இந்த வழக்கு குறித்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும், சிறுமி எழுதிய தற்கொலைக் குறிப்பைப் பற்றி செவ்வாய்க்கிழமை கண்டரிந்ததாகவும் SHO மேலும் தெரிவித்தார். சிறுமி உளவியல் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்ததாகவும் அவர் கூறினார்.

நம்மைச் சுற்றி பல விஷயங்கள் தவறாக நடந்து கொண்டிருக்கலாம். நம்மால் ஆன வரை அவற்றை சசி செய்ய முயலலாம். அல்லது அதற்கான நபர்களிடம் அதைப் பற்றி தெரிவிக்கலாம். தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது!!

ALSO READ: கள்ளக்தலிக்காக தனது மனைவியை போட்டுத்தள்ளிய கொடூர கணவர்..!

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *