சாதனை படைத்தது பிரதமர் மோடியின் ‘9 pm 9 minute’ ட்வீட்: இதற்கு கிடைத்த re-tweet எவ்வளவு தெரியுமா?

Spread the love


2020 ஆம் ஆண்டு முடிவுக்கு வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டரில் சாதனை படைத்துள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியபோது, ​​பிரதமர் மோடி மக்களிடம் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஏப்ரல் மாதம், கொரோனா வாரியர்ஸுக்கு, நன்றி தெரிவித்து அவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக, இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்கை ஏற்றுமாறு பிரதமர் மோடி நாட்டின் மக்களைக் கேட்டுக்கொண்டார்.

பிரதமர் மோடி, COVID-19 வீரர்களுக்கு தான் வணக்கம் செலுத்தும் படங்களுடன் ஒரு ட்வீட்டை வெளியிட்டார். அந்த குறிப்பிட்ட ட்வீட் ஒரு சாதனையை உருவாக்கியுள்ளது.

ஏப்ரல் 5 ம் தேதி பிரதமர் மோடி (PM Modi) செய்த அந்த ட்வீட் இந்தியாவில் மறு ட்வீட் (Retweet) செய்யப்பட்ட சிறந்த, முன்னணி அரசியல் ட்வீட் ஆனது. பிரதமர் மோடியின் ட்வீட் 118,000 முறைகளுக்கு மேல் ரீ-ட்வீட் செய்யப்பட்டது. இது 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒரு அரசியல்வாதியின் ட்வீட்டிற்கு கிடைத்துள்ள மிக அதிக அளவு ரீ-ட்வீட்டாகும். மேலும், இந்த ட்வீட்டிற்கு 513,300 க்கும் மேற்பட்ட ‘லைக்’-களும் கிடைத்துள்ளன.

2020 ஆம் ஆண்டு நிறைவடையும் நிலையில், ட்விட்டரில் அதிகம் ரீ-ட்வீட் செய்யப்பட்ட ட்வீட்கள், அதிக லைக்குகளை பெற்ற ட்வீட்டுகள், வைரல் ஆன ட்வீட்கள் என அனைத்தையும் ட்விட்டர் (Twitter) எடுத்துக்காட்டி வருகிறது. COVID-19 க்கு மத்தியில், மார்ச் மாதத்தில் இந்தியாவில் லாக்டௌன் விதிக்கப்பட்டது. பிரதமர் மோடி ஏப்ரல் முதல் வாரத்தில் நாட்டு மக்களுடன் உரையாற்றினார்.

ALSO READ: Yahoo: 2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 20 இந்தியர்கள் யார் தெரியுமா?

ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் தங்கள் வீடுகளின் மின் விளக்குகளை அணைத்து விளக்குகளை ஏற்றுமாறு அவர் நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். கோரோனா வீர்ரகளுக்கு (Corona Warriors) நன்றி செலுத்தும் விதமாக இதை பிரதமர் செய்யச் சொன்னார்.

இதைத் தொடர்ந்து, அவர் தனது இல்லத்தில் விளக்கு ஏற்றி வைக்கும் படத்தை வெளியிட்டார். அதில் பிரதமர் மோடி ‘சுப் கரோதி கல்யாணமரோக்ய தன்சம்பதா, சத்ருபுத்திவினாஷே தீப்ஜோதிரன்மஸ்துதே’ என்று எழுதினார். இந்த ட்வீட் வரலாற்றை உருவாக்கியுள்ளது.

ட்விட்டரில் அதிக ஃபாலோயர்கள் கொண்ட இந்திய அரசியல்வாதிகளின் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு 60 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்ஸ் உள்ளனர்.

ALSO READ: 2020-யின் Top ட்வீட்: ட்விட்டரில் சாதனை படைத்த விஜய்யின் செல்ஃபி!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *