சுதந்திர தின சிறப்பு: 74-வது சுதந்திர தினத்தில் கால் தடம் பதித்த இந்தியா!

Spread the love


நாடு சுதந்திரம் அடைந்து 74 ஆண்டுகள் ஆகிவிட்டது… இதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் ஆகியவற்றைப் பற்றி நாம் தெரிந்து கொள்வோம்..!

கடந்த 73 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில் இந்தியா பிரிட்டிஷ் காலனித்துவத்திலிருந்து சுதந்திரம் பெற்றதால், ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் இந்த நாள் பெரும் முக்கியத்துவத்தை அளிக்கிறது. 73 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு நாடுகள் இந்தியாவில் இருந்து செதுக்கப்பட்டன, ஆனால் அதற்கு முன்னால் பல முன்னேற்றங்கள் நடந்தன. அந்த சம்பவங்களைப் பற்றியும், முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, மகாத்மா காந்தி, மற்றும் முகமது அலி ஜின்னா உள்ளிட்ட பிரிவினை மற்றும் சுதந்திரத்தின் முக்கிய கட்டடக் கலைஞர்கள் பற்றியும் உங்களுக்குத் தெரிவிக்கிறோம். 

இந்தியாவில் வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் கிழக்கிந்திய கம்பெனி மூலம் தங்கள் சாம்ராஜ்யத்தை 1757ஆம் ஆண்டு கட்டமைத்தனர். இந்நிலையில் 1857 ஆம் ஆண்டு இந்தியாவில் முதல் சுதந்திரப் போர் வெடித்தது. ஆங்கிலேயர்களிடம் சுதந்திரம் வேண்டும் என்ற வேட்கை இந்த சிப்பாய்ப் புரட்சியின் மூலம் தான் உதயமானது. ஆனால், இதனை வெற்றிகரமாக முறியடித்து இந்தியர்களை மீண்டும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர் வெள்ளையர்கள். இங்கிலாந்தில் இருந்து கொண்டே உரிய பிரதிநிதிகளை நிர்ணயித்து ஆட்சி செய்து வந்தனர். இந்தியர்களை மிகுந்த ஒடுக்குமுறைக்கு ஆளாக்கினர். ஒருகட்டத்தில் சுதந்திரம் வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக ஒலிக்கத் தொடங்கியது.

இதற்கு ஏராளமான தலைவர்களின் குரல்களும் காரணமாகும். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், பகத் சிங், மங்கள் பாண்டே, மகாத்மா காந்தி, ராணி லக்‌ஷ்மிபாய், சரோஜினி நாயுடு, சந்திர சேகர் ஆசாத், பாபா சாகேப் அம்பேத்கர் உள்ளிட்ட எண்ணற்ற தலைவர்கள் சுதந்திரத்திற்காக பாடுபட்டனர். இவர்கள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு எதிராக மிகவும் தைரியமாக புரட்சிக் கனலை பற்ற வைத்தனர். இதில் அகிம்சை வழியிலான மகாத்மா காந்தியின் போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. இது ஆங்கிலேயர்களின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்தது.

ALSO READ | இந்த காரணங்கள் திருமண தாமதத்திற்கு காரணமாக இருக்கலாம்..!

இத்தகைய புரட்சிகள், போராட்டங்கள், உயிர் தியாகங்கள் உள்ளிட்டவற்றின் விளைவாக 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்றது. அப்போது இஸ்லாமியர்கள் தங்களுக்கென்று தனி நாடாக பாகிஸ்தானைப் பிரித்துக் கொண்டது மற்றொரு கதை. இத்தகைய சிறப்பு வாய்ந்த சுதந்திர தினம், தேசத்தை நேசிக்கும் ஒவ்வொருவராலும் முழு உற்சாகத்துடன் கொண்டாடப்பட வேண்டும். தன்னலமற்ற தியாகிகளை நினைத்து பார்க்க வேண்டிய அவசியம். அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்தி சுதந்திரத்தைக் கட்டி காப்பது நமது கடமை. இதையொட்டி நாடு முழுவதும் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்வுகள் அரங்கேறும். ஆண்டு தோறும் தியாகிகள் கவுரவிக்கப்படுவர்கள். சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். தேசிய நலனுக்கான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். நாட்டு மக்களை உற்சாகமூட்டும் வகையிலான உரைகளை தலைவர்கள் நிகழ்த்துவர்கள்.

குறிப்பாக சுதந்திர தினத்தன்று டெல்லியின் செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றும் நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்தது. அப்போது பிரதமருக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படும். இதேபோல் நாடு முழுவதும் முதலமைச்சர்களும், அரசியல் தலைவர்களும் தேசியக் கொடிய ஏற்றி சுதந்திர தினத்தைக் கொண்டாடி மகிழ்வர். ஆனால், இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதால் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் பெரிய அளவில் வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, போதிய சரீர இடைவெளி, முகக்கவசம், கை சுகாதாரம் உள்ளிட்டவற்றைக் கடைபிடிக்க வேண்டும். தேசப்பக்தியை வெளிப்படுத்தும் நோக்கில் நோய்த் தொற்றில் மாட்டிக் கொள்ளாதீர்கள் என்பதே அரசின் முக்கிய அறிவுறுத்தலாக இருக்கிறது.

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *