தடுப்பூசிக்கு பிறகு ஏற்படும் சிறிய தொற்று ஒரு நல்ல அறிகுறி: AIIMS இயக்குநர்

Spread the love


சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவிலும் பரவத் தொடங்கியது. கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த நாடுமுழுவதும் பொதுமுடக்கம் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதோடு,  தடுப்பூசி தயாரிக்கும் பணியும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.

தடுப்பு மருந்து பரிசோதனைக்கு பின், சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்த ‘கோவிஷீல்டு’(Covishield), பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த ‘கோவேக்ஸின்’(Covaxin) ஆகிய தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதை அடுத்து நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணியை இன்று, பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) காலை 10.30 மணிக்கு துவக்கி வைத்தார். முதல் கட்டமாக நாடெங்குலும் உள்ள 3,006 மையங்களில் துவக்கி வைத்தார். அடுத்த சில மாதங்களுக்கு தொடர்ந்து தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையில் நடந்த தடுப்பூசி  போடும் நடவடிக்கையில் அதன் இயக்குநர் ரண்தீப் குலேரியாவுக்கும் (Dr Randeep Guleria) தடுப்பூசி போடப்பட்டது. 
தடுப்பூசி போட்டுக் கொண்ட  ஒரு மணி நேரத்திற்உ பிறகு, தடுப்பூசி தொடர்பான தனது தனிப்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள டாக்டர் குலேரியா, தனது உடல நிலை முற்றிலும் சரியாக இருப்பதாகவும்,  அவருக்கு எந்தவிதமான எதிர்வினையும் இல்லை என்றும் கூறினார்.

கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் முற்றிலும் பாதுகாப்பானது என்றும், தடுப்பூசி பற்றி மக்களுக்கு எந்த வித குழப்பமும் சந்தேகமும் வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார். 

மேலும், தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு ஏற்படும் சிறிய அளவிலான தொற்று ஒரு நல்ல அறிகுறி என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

லேசான காய்ச்சல், உடல் வலி அல்லது மூட்டு வலிகள் போன்றவை ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு ஏற்படக்கூடும், இது தானாகவே குறைந்துவிடும், மேலும் மக்கள்  இது தொடர்பான தகவலை பெற ஹெல்ப்லைனைத் தொடர்பு கொள்ளலாம். “ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு காய்ச்சல் மற்றும் உடல் வலி இருப்பது குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை” என்று டாக்டர் குலேரியா கூறினார்.

ALSO READ | COVAXIN கடுமையான பக்க விளைவை ஏற்படுத்தினால் இழப்பீடு வழங்கப்படும்: Bharat BioTech

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *