‘தலைமறைவாக’ உள்ள மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்… மகாராஷ்டிரா சுகாதாரத் துறை..!!!

Spread the love


கொரோனா வேகமாக பரவி வரும் காலத்தில் மருத்துவர்களின் சேவை மிகவும் இன்றியமையாதது. நாடெங்கிலும் உள்ள பல மருத்துவர்கள், இரவு பகல் பாராமல், பணி செய்து வருகிறார்கள்.

அதே நேரத்தில் மகாராஷ்டிராவில், சுமார் 600 மருத்துவர்கள் பணிக்கு நெடு நாட்களாக வரவில்லை. அவர்கள் நீண்ட கால விடுப்பில் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. தலை மறைவாக உள்ள சுமார் 600 மருத்துவர்கள், 15 நாட்களுக்குள்  பணிக்கு திரும்ப வேண்டும் என கூறியுள்ள மகாராஷ்டிரா மாநில சுகாதார அமைச்சகம், பணிக்கு திரும்ப வராதவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் பொருந்தொற்று நோய் சட்டம் மற்றும் மகாராஷ்டிரா சிவில் சேவை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இவர்கள் பணிக்கு திரும்பவில்லை என்றால் இவர்களுக்கு மருத்துவ உரிமம் ரத்து செய்யப்படலாம்.

மாநிலத்தில் கொரோனா தொற்று நோய் காரணமாக நெருக்கடியான காலகட்டத்தை கடந்து வரும் இந்த நேரத்தில், மருத்துவர்களின் இந்த அலட்சிய போக்கு கண்டிக்கதக்கது என கூறியுள்ளது. அதனால், நீண்ட காலமாக விடுப்பில் உள்ளவர்கள் உடனடியாக 15 நாட்களுக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | உ.பி.யில், அமர்சிங் மரணத்தினால் காலியான மாநிலங்களவைக்கு இடைதேர்தல் அறிவிப்பு..!!    

குறிப்பிட்ட காலத்திற்குள் பணிக்கு வராத அதிகாரிகள் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கைது செய்யப்படலாம்.

மேலும் படிக்க | Watch Video: COVID-டிலிருந்து மீண்டதை நடனமாடி கொண்டாடிய குடும்பம்!!

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *