திரிபுரா முதல்வர் பிப்லப் தேப்ற்கு எதிராக 7 MLAக்கள் போர்கொடி.. பதவி தப்புமா!!

Spread the love


புதுடில்லி: முதலமைச்சர் பிப்லாப் குமார் தேபின் ‘மோசமான தலைமை’ மற்றும் ‘ஆதிக்க செயல்பாடு’  ஆகியவற்றை எதிர்த்து போர் கொடி தூக்கியுள்ள ஆளும் பாஜக கட்சியின் சில எம் எல் ஏக்கள்,  உயர் தலைமையைச் சந்திக்க திரிபுராவிலிருந்து டெல்லிக்கு வந்துள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் குழுவிற்கு தலைமை தாங்கும் பாஜக எம்.எல்.ஏ சுதீப் ராய் பார்மன், கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா, பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோரை சந்திக்க நேரம் கோரியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடியையும் அவர்கள் சந்திக்க விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவ்வப்போது தெரிவிக்கும், முதலமைச்சர் ஏற்கனவே பல முறை கட்சியை தர்ம சங்கடப்படுத்தியுள்ளார் என்று அவர்கள் கூறினர். தாங்கள் அனைவரும் கட்சியின் உண்மையான தொண்டர்கள் என்றும், மாநிலத்தில் பாஜக ஆட்சி பல காலத்திற்கு நீடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தற்போதைய தலைமை, எதிர்க்கட்சிகள் உயிர்தெழ வழி கொடுக்கும் என அவர்கள் கருதுகின்றனர்.

எம்.எல்.ஏ.க்களுக்கு பாஜகவுடன் என்ற கட்சி தொடர்பாக எந்த புகாரும் இல்லை, பிரதமர் மோடி மற்றும் அவரது தலைமைக்கு மிகவும் விசுவாசமாக உள்ளனர்.

டெல்லியில் முகாமிட்டவர்களில் சுஷாந்தா சவுத்ரி, பரிமல் டெப் பார்மா, டி.சி.ராங்க்வால், ஆஷிஷ் தாஸ், அதுல் தேப் பார்மா, பர்ப் மோகன் திரிபுரா மற்றும் ராம் பிரசாத் பால் ஆகியோர் அடங்குவர்.

2018 ஆம் ஆண்டில், 25 ஆண்டு கால கம்யூனிஸ ஆட்சியை வீழ்த்தி, பாஜகவும் அதன் கூட்டாளியான திரிபுராவின் சுதேச மக்கள் முன்னணியும் (ஐபிஎஃப்டி) திரிபுராவில் வெற்றி பெற்றன. 60 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில், பாஜகவுக்கு 36 எம்எல்ஏக்கள் உள்ளனர், மேலும் 8 ஐபிஎஃப்டி எம்எல்ஏக்களின் ஆதரவும் உள்ளது.

மேலும் படிக்க | Hathras Case: பாதிக்கப்பட்ட குடும்பம்,  அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகின்றனர்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYe

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *