தேர்தல் எதிரொலி!! 3.5 லட்சம் ஒப்பந்த ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் இபிஎஃப் நன்மை

Spread the love


பாட்னா: பீகாரில் தேர்தல் இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. பீகார் மாநிலத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைக் கவனித்தில் கொண்டு, அம்மாநில அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் நியமிக்கப்பட்ட 3.5 லட்சம் ஒப்பந்த ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய போனஸ் வழங்குவதாக அறிவித்துள்ளது.

ஆசிரியர்களின் அடிப்படை சம்பள உயர்வை (Basic Salary Hike) 15 சதவீதம் அதிகரிக்கவும், அவர்களை இபிஎஃப் வரம்பிற்குள் கொண்டுவரவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

செவ்வாயன்று நடந்த நிதீஷ்குமார் (Nitish Kumar) தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன. பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் கல்வி நிறுவனங்கள் மற்றும் நகராட்சி அமைப்புகளில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் நூலக ஊழியர்களின் நலனுக்காக பீகார் அமைச்சரவை இந்த முடிவுகளை எடுத்துள்ளது.

ALSO READ |  BIG NEWS! மத்திய ஊழியர்களுக்கு மார்ச் 2021 வரை சம்பளம் உயர்வு கிடையாது என உத்தரவு

இந்த ஒப்புதலுக்குப் பிறகு, மாநிலத்தின் மூன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கும் பணியாளர் வருங்கால வைப்பு நிதியின் (Employees Provident Fund) பலன் வழங்கப்படும். இந்த நன்மை செப்டம்பர் 2020 முதல் வழங்கப்படும்.

ஆசிரியர்களின் அடிப்படை சம்பளத்தை 15 சதவீதம் உயர்த்துவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பள உயர்வு ஏப்ரல் 1, 2021 முதல் நடைமுறைக்கு வரும்.

EPAF இல் மாநில அரசு 13 சதவீத பங்கை வழங்கும் என்று கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆர்.கே.மஹாஜன் தெரிவித்தார். இதில், 12 சதவீதம் ஆசிரியர்களின் பி.எஃப் கணக்கிற்கும், ஒரு சதவீதம் ஈ.பி.எஃப்.ஓவுக்கும் செல்லும். 
ஆசிரியர்களும் தங்கள் பங்கை 12 சதவீதமாகக் கொடுப்பார்கள். ஈபிஎஃப் நன்மைகளை வழங்குவதும் ஒரு வகையான சேமிப்பு அதிகரிப்பு ஆகும். ஒருவேளை பணியில் இருக்கும் போது ஆசிரியர்கள் இறந்தால், இரண்டரை முதல் ஆறு லட்சம் ரூபாய் வரையிலான உதவித்தொகையை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ALSO READ |  Gratuity எப்படி கணக்கிடுவது? இந்த பார்முலா உங்களுக்கு அதிக பணம் சம்பாதிக்க உதவும்

இந்த இபிஎஃப் வழங்கல் மாநில அரசு ஆண்டுதோறும் ரூ .815 கோடி கூடுதல் சுமையை ஏற்படும் என்றும் சம்பள உயர்வு காரணமாக ஆண்டுக்கு ரூ. 1950 கோடி சுமை ஏற்படும் என்றும் நிதீஷ் அரசு தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் அரசாங்க கருவூலத்தில் 2765 கோடி அளவுக்கு கூடுதல் செலாகும். 

COVID ஐ சமாளிப்பதற்கும் பொருளாதார மந்தநிலையை சமாளிப்பதற்கும் ஆகும் கூடுதல் செலவு மற்றும் பற்றாக்குறை காரணமாக நடப்பு நிதியாண்டில் ஊதிய உயர்வை அரசாங்கத்தால் செயல்படுத்த முடியவில்லை என்று கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆர் கே மகாஜன் (R K Mahajan) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *