‘தோனியின் hair style-ஐ ரசித்தேன், அவரிடம் பல விஷயங்களைக் கற்றேன்’- ஆனந்த் மஹிந்திரா புகழாரம்!!

Spread the love


புதுடில்லி: மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா (Anand Mahindra) அவ்வப்போது ட்விட்டர் மூலம் தன் மனதை வெளிக்காட்டும் பிரபலங்களில் ஒருவர். சமீபத்தில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி (MS Dhoni) சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதையடுத்து அவர் தோனி குறித்த தன் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

முதல் முறையாக தான் தோனியைப் பார்த்ததையும், கவனித்ததையும், தோனி அவருக்கு கற்பித்த பாடங்களையும் பற்றி ஆனந்த மஹிந்திரா பகிர்ந்து கொண்டார்.

எம் & எம் தலைவர் ஆனந்த் மஹிந்திரா எம்.எஸ்.தோனியின் hair style, அதாவது வித்தியாசமான சிகை அலங்காரம் அவரை முதலில் கவனிக்க வைத்ததாகக் கூறியுள்ளார். தோனி அவர் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

டி.வி.யில் தோனியை முதலில் சுட்டிக்காட்டியது அவரது தாயார் என்றும், அவரது hair style-லால் அவர் ஈர்க்கப்பட்டார் என்றும் ஆனந்த் மஹிந்திரா ட்வீட் செய்துள்ளார். ஒரு தாக்கத்தை ஏற்படுத்த ஒருவர் உண்மையாக இருக்க வேண்டும், தைரியமாக இருக்க வேண்டும், ஆபத்துகளை எதிர்கொள்ள வேண்டும், தனித்து நிற்க வேண்டும் என்ற முக்கியமான விஷயங்களை தோனி தனக்கு நினைவுபடுத்தியதாக ஆனந்த் ட்வீட் செய்தார்.

“தோனி விளையாட்டுக்கு கொண்டு வந்த நல்ல விஷயங்களைப் பற்றி பலர் கூறியுள்ளார்கள். நான் கிரிக்கெட்டில் நிபுணன் இல்லை. என் அம்மா அவரது hair style-ஐ சுட்டிக்காட்டி டிவியில் காட்டியபோது நான் அவரை கவனித்தேன். ஒரு தாக்கத்தை ஏற்படுத்த ஒருவர் உண்மையாக இருக்க வேண்டும், தைரியமாக இருக்க வேண்டும், ஆபத்துகளை எதிர்கொள்ள வேண்டும், தனித்து நிற்க வேண்டும் என்ற முக்கியமான விஷயங்களை தோனி தனக்கு நினைவுபடுத்தினார்” என மஹிந்திரா ட்வீட் செய்துள்ளார்.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 39 வயதான அவர் தனது உத்தியோகபூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் 16 ஆண்டுகால தனது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விடை பெறுவதாக அறிவித்தார்.

ALSO READ: Breaking : தல MS Dhoni சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

தனது கிரிக்கெட் பயணத்தின் வீடியோவைப் பகிர்ந்த முன்னாள் இந்திய கேப்டன் தனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் அனைவரும் அளித்த அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி தெரிவித்தார்.

தோனி 50 ஓவர் போட்டிகளில் 199 போட்டிகளில் இந்தியாவை அணித் தலைவனாக வழிநடத்தியுள்ளார். இதில் 110 போட்டிகளில் அணி வென்றது. 74 போட்டிகளில் தோல்வியுற்றது. விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான தோனி 60 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவை தலைவனாக வழிநடத்தியுள்ளார். இதில் 27 போட்டிகளில் நாம் வென்றோம்.

2020 இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL 2020) தோனி சென்னை சூப்பர் கிங்ஸை (CSK) வழிநடத்தவுள்ளார். இது செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) நடைபெற உள்ளது.

ALSO READ: உலக கிரிக்கெட் இனி helicopter ஷாட்-களை மிஸ் செய்யும் – அமித் ஷா!

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *