நாராயண் மூர்த்தியின் மகள் இங்கிலாந்து ராணியை விட பெரிய பணக்காரரா? சர்ச்சையில் சிக்கிய கணவர்

Spread the love


நாராயண் மூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக் தனது மனைவி அக்ஷதா மூர்த்தியின் நிதி நிலைகளை வெளியிடத் தவறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அஷதா இன்போசிஸ் நிறுவனர் என்.ஆர்.நாராயண் மூர்த்தியின் மகள் ஆவார்.

பிரிட்டிஷ் செய்தித்தாள் தி கார்டியன் நடத்திய விசாரணையின்படி, அக்ஷதாவின் சொத்துக்களின் மதிப்புகள் அவரை இங்கிலாந்து ராணியான இரண்டாம் எலிசபெத்தை விட பணக்காரராகக் காட்டுகின்றன. இங்கிலாந்தில் அனைத்து அமைச்சர்களும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் நிதி விவரங்களை பகிர்ந்து வெளியிட வேண்டும் என்ற விதி உள்ளதால், சுனக் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார்.

தனது தந்தை நாராயண மூர்த்தியின் (Narayan Murthy) தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸில், பிரிட்டிஷ் பவுண்டு ஸ்டெர்லிங் (GBP) 480 மில்லியன் மதிப்புள்ள பங்குகளை அக்ஷதா வைத்திருக்கிறார். இது சுமார் 4,200 கோடி ரூபாய்க்கு சமமாகும். மறுபுறம், எலிசபெத் மகாராணியின் தனிப்பட்ட சொத்தின் அளவு GBP 350 மில்லியன் ஆகும். இதன் மதிப்பு சுமார் 3,400 கோடி ரூபாய் ஆகும்.

கார்டியனின் ஆராய்ச்சி, அக்ஷதாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இன்னும் பல முதலீடுகளும் உள்ளனஎன்பதைக் காட்டுகிறது. இந்தியாவில் அமேசானுடன் (Amazon) GBP 900 மில்லியம் மதிப்புமிக்க கூட்டு வணிக நிறுவனத்திலும் அவர்கள் பங்கு கொண்டிருக்கிறார்கள். அக்ஷதாவின் தந்தை நாராயண் மூர்த்தியிடம் உள்ள ஒரு முதலீட்டு முறைமை மூலம் இந்த முதலீடு செய்யப்பட்டுள்ளது.

ALSO READ: அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் அணியில் இணையும் மற்றொரு இந்திய-அமெரிக்கர்

அமைச்சரவை விதிகளின் படி, தனது பொறுப்புகளுடன் தொடர்புடைய தனது மனைவியின் நிதி நிலைமைகளைக் குறித்து சுனக் அறிவித்திருக்க வேண்டும்.

சுனக்கின் நிதிநிலை அறிக்கைகள், இங்கிலாந்தை (England) தளமாகக் கொண்ட ஒரு சிறிய மூலதன நிறுவனமான கேடமரன் வென்ச்சர்ஸ் நிறுவனத்தில் அவரது மனைவிக்கு இருக்கும் உரிமையை மட்டுமே குறிப்பிடுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இன்போசிஸ் (Infosys) மற்றும் அமேசான் இந்தியாவைத் தவிர வேறு ஆறு இங்கிலாந்து நிறுவனங்களிலும், அக்ஷாதாவுக்கு அறிவிக்கப்படாத பங்குகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இன்போசிஸ் ஆண்டு அறிக்கையின்படி, அக்ஷதா மூர்த்தி குழுவில் 0.91% பங்குகளை வைத்திருக்கிறார். அந்த பங்குகள் தற்போது GBP 430 மில்லியன் மதிப்புடையவை. ஒவ்வொரு ஆண்டும், அவரது பங்குகள் மில்லியன் கணக்கான ஈவுத்தொகையை பெறுகின்றன. அவரது குடும்ப உறுப்பினர்களில், அவரது சகோதரர் ரோஹன் மூர்த்திக்கு மட்டுமே அக்ஷதாவை விட அதிக பங்குகள் உள்ளன. குடும்ப உறுப்பினர்கள் அனைவரது ஒருங்கிணைந்த பங்குகளின் மதிப்பு GBP 1.7 பில்லியன் ஆகும்.

செய்தித்தாளின் அறிக்கையின் அடிப்படையில், சுனக் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க இங்கிலாந்து அரசாங்க நெறிமுறைகள் கண்காணிப்புக் குழுவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

ALSO READ: யார் இந்த கீதாஞ்சலி ராவ்? TIME Magazine-ன் கவர் பேஜில் இவர் வரக் காரணம் என்ன?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *