நீக்கப்பட்ட சில மணிநேரத்தில் கூகுள் ஸ்டோரில் சேர்க்கப்பட்ட Paytm..!!!

Spread the love


”we’re back!” என ட்வீட் செய்தது Paytm. சில மணி நேரம் முன்பாக,  கொள்கை விதிகளை மீறி வருவதாக கூறி, அதன் செயலி கூகிள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது.

Paytm என்பது, இந்தியாவில் மிகப்பெரிய அளவில் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் பேமெண்ட் சேவை ஆகும். மிகப் பெருய ஸ்டார் அப் நிறுவனமான பேடிஎம் (Paytm) நிறுவனம் கூகிள் ப்ளே ஸ்டோர் கொள்கை விதிகளை  மீறுவதாக கூறி, கூகிள் நிறுவனம் பேடிஎம் செயலியை ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியது. 

எனினும் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு டிஜிட்டல் முறையிலான பேமெண்டில் அதிகம் பயன்படுத்தப்படும் பேடிஎம் (Paytm) செயலி விரைவில் கூகிள் ப்ளே ஸ்டோரில் மீண்டும் கொண்டு வரப்படும் எனவும் அதில் உள்ள வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும், வாடிக்கையாளர்கள் அதனை தொடர்ந்து பயன்படுத்தலாம் எனவும் நிறுவனம் உறுதி அளித்தது.

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்புவது தொடர்பாக, பிரபலமான ஸ்ட்ரீமிங் சேவையான டிஸ்னி+ (Disney+) ஹாட்ஸ்டார் (Hotstar)  உள்ளிட்ட பல செயலிகளுக்கும் கூகிள் எச்சரிக்கைகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

பிரபலமான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், ஆன்லைன் சூதாட்டங்களை அனுமதிக்கும் கூகிள் கெமிங் ஆப்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது இந்தியாவில் சட்டவிரோதமானது.

ALSO READ | கூகிள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட Paytm.. அதில் உள்ள பணம் என்ன ஆகும்..!!!

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *