பணம் இல்லை…. ஒரே இரவில் 48 விமானிகளை வேலையை விட்டு நீக்கிய Air India..!!

Spread the love


உலகமே கொரோனா பிடியில் சிக்கித் தவிக்கும் இந்த காலத்தில், பல துறைகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. இதில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட துறை விமான போக்குவரத்து துறை எனக் கூறலாம். 

அந்த துறையை பொறுத்தவரை, உடனடியாக நிலைமை சரியாகும் வாய்ப்பு எதுவும் தென்படவில்லை. தற்போது விமான போக்குவரத்து இயல்பாகும் வாய்ப்பு எதுவும் தெரியவில்லை.  அதிகரிக்க வாய்ப்பில்லை.

ஏர் இந்தியா நிறுவனம் பெரிய அளவில் இழப்புகளைச் சந்தித்து வருவதால்,  சம்பளம் கொடுக்கும் நிலையில் நிறுவனம் இல்லை என நிறுவனம் கூறியுள்ளது. 

இதில் மற்றொரு விந்தையான விஷயம் என்னவென்றல், பணியில் இருந்து நீக்கப்பட்ட இந்த 48 பேரில், பணி நீக்கம் செய்யும் போது விமானத்தை இயக்கிக் கொண்டிருந்தனர் என்பது தான்.

ALSO READ | விரைவில் இந்த புதிய விமானத்தில் பயணிக்க உள்ளார் பிரதமர் மோடி, சிறப்பு என்ன?

அவர்கள் அனைவரும் இதற்கு முன்பு ராஜினாமா செய்ததாகவும், ராஜினாமாவை வாபஸ் பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் ராஜினாமா திரும்பப் பெறப்படும் என முன்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஆனால், திடீரென்று, அவர்களில் சிலர் விமானியாக பணியில் விமானத்தை இயக்கிக் கொண்டிருந்த போதே, , ​​திடீரென ஏர் இந்தியா வியாழக்கிழமை இரவு அவர்களுக்கு பணி நீக்கம் தொடர்பான கடிதத்தை அனுப்பி அவர்களை பணிநீக்கம் செய்தது. அவர்களில் சிலர் 2019 ல் ராஜினாமா செய்திருந்தாலும்,  விதி முறையின் கீழ் ஆறு மாத காலத்திற்குள் ராஜினாமாக்களை வாபஸ் பெற்றனர்.

தற்போதைய விமான போக்குவரத்து அளவு,  COVID க்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு. மேலும் இது எதிர்காலத்தில் அதிகரிக்க வாய்ப்பில்லை. நிறுவனம் பெரிய அளவில் இழப்புகளைச் சந்தித்து வருகிறது. மேலும் சம்பளம் கொடுப்பதற்கு போதிய பணம் இல்லை, ”என்று பணி நீக்க கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

ALSO READ | Back To Home: கோழிக்கோடு விமான விபத்தில் இறந்தவரின் கடைசி முக நூல் பதிவு

இதற்கு முன், ஏர் இந்தியா தனது ஊழியர்களுக்கு சம்பளம் இல்லாமல்,  ஐந்து ஆண்டுகளுக்கு விடுப்பு அளிக்க முடிவு செய்திருந்தது.

பெரும் நஷ்டத்தில் இயங்குவதால், செலவை குறைப்பதற்கு ஏர் இந்தியா எடுத்துள்ள சமீபத்திய முடிவுகள் குறித்து , சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தில் நடந்த கூட்டத்தில் மதிப்பாய்வு செய்யப்பட்டன. தங்கள் கூட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களை பணிநீக்கம் செய்த பிற விமான போக்குவரத்து நிறுவனங்களை போலல்லாமல், ஏர்இந்தியாவின் எந்த ஊழியரும் பணிநீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என்று கூட்டத்தில் மீண்டும் வலியுறுத்தபப்ட்டது என ட்விட்டரில் ஏர் இந்தியா கூறியது.

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *