பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானார் Class 11 மாணவி: FB Search மூலம் பிடிபட்ட குற்றவாளிகள்

Spread the love


உத்தரபிரதேசத்தில் (Uttar Pradesh) உள்ள ஜலான் மாவட்டத்தின் ஓராய் நகரத்தின் வனப்பகுதியில் ஒரு 11 ஆம் வகுப்பு மாணவி இரண்டு நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீசார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். சிறுமி தனது தாயார் சேர்க்கப்பட்டிருந்த மாவட்ட மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார் என தெரிய வந்துள்ளது.

வியாழக்கிழமையன்று அப்பென்ணின் தாயின் உடல்நிலை மோசமடைந்ததால், அவரது தந்தை பெண்ணின் தாயை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. வீட்டில் தனியாக இருந்த சிறுமியும் நள்ளிரவில் மருத்துவமனைக்கு புறப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர் செல்லும் வழியில், இரண்டு நபர்கள் அவரை மடக்கி ஒரு வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மயக்கமடைந்தார்.

குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் அடையாளம் காண சமூக ஊடகங்களின் உதவியை எடுத்துக்கொண்ட காவல்துறையினர் அவர்களை கைது செய்ததாக ஜலானின் காவல்துறை கண்காணிப்பாளர், யஷ்வீர் சிங் தெரிவித்தார்.

சிறுமியை இழுத்துச் செல்லும்போது, ​​குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் மற்றொரு நபரை பெயர் கொண்டு அழைத்ததாகவும், அது அந்த சிறுமியின் நினைவில் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மீண்டும் சுயநினைவு திரும்பியவுடன், அவர் தனது குடும்பத்தினருடன் காவல் நிலையத்தை அணுகி குற்றம் சாட்டப்பட்டவரின் பெயரை அவர்களிடம் கூறினார்.

ALSO READ: 90 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 33 வயது இளைஞன்: மனித உருவில் மிருகங்கள் உலவும் உலகம்!!

காவல்துறையினர் Facebook-ல் குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தேடினர். பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டப்பட்ட இருவரில் ஒருவரை அவரது புகைப்படத்தின் மூலம் சமூக ஊடகத் தளத்தில் அடையாளம் கண்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.

குற்றம் சாட்டப்பட்ட நபர், கௌரவ் சோனி, ஓராய் நகரில் முச்சக்கர வண்டியின் ஓட்டுனராக இருக்கிறார். அவர், அவரது வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் தனது கூட்டாளியான நீரஜ் சோனி பற்றி போலீசாரிடம் தெரிவித்தார். இரவு நேர சோதனைகளுக்குப் பிறகு, நீரஜையும் போலீசார் கைது செய்தனர்.

இருவர் மீதும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (POCSO) சட்டத்தின் பிரிவு 3/4 ன் கீழ் பாலியல் பலாத்காரத்திற்கான (Rape) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  

ALSO READ: Coimbatore Horror: பெண்ணே ஜாக்கிரதை, நண்பன் என்ற பெயரில் நரிகள் நடமாடும் உலகம் இது!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *