பிகார் சட்ட மன்ற தேர்தல்.. தேர்தல் பணியில் தேவேந்திர பட்னவிஸ்..!!!

Spread the love


பிகார் சட்ட மன்ற தேர்தல்  நெருங்கி வரும் நிலையில்,  தேர்தல் பணியில், பாஜக, முன்னாள் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸை களமிறக்க உள்ளது.

பாஜக கூட்டணி கட்சிகளின் இடையில் சில அதிருப்தி நிலவும் நிலையில், அனைத்தையும் சரி செய்யும் நோக்கி, ஒரு முக்கிய நடவடிக்கையாக தேவேந்திர பட்னவிஸ் களமிறக்கப்படுகிறார்.

சமீபத்தில்  பாஜகவின் பிகார் பிரிவின் முக்கிய கூட்டத்தில், தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

திரு,பட்னவிஸ் அவர்கள் ஏற்கனவே தனது பணியை தொடங்கி விட்டார் எனவும், அது குறித்து முறையான அறிவிப்பை பாரதீய ஜனதா கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா அவர்கள் முறையாக பின்னர் அறிவிப்பார் எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

மாநிலத்தில் உள்ள பாஜகவின் இரண்டு கூட்டணி கட்சிகளான, சிராக் பாஸ்வான் தலைமையிலான கோக் ஜனசக்தி கட்சி மற்றும் நித்திஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்  இரண்டும் மோதல் போக்கை கடைபிடித்து வருவதால், இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

ALSO READ | வருமான வரி: விமான டிக்கெட், நகை வாங்குதல், கல்வி தொடர்பான புதிய விதிகள்..!!!

சில குறிப்பிட்ட முன்னேற்றங்கள் மனதிற்கு உகந்ததாக இல்லை என லோக் ஜனசக்தி கட்சி BJP தலைமையிடம் தெரிவித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

சிராக் பாஸ்வான் சமீபத்தில் பாரதீய ஜனதா கட்சித் தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு கட்சிகளுக்கு இடையில் பாலம் போல் செயல்பட்டு வரும் பாஜக, ஏற்கனவே, தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக, நித்திஷ் குமாரை அறிவித்துள்ளது.

BJP-யின் பொது செயலரான் பூபேந்திர யாதவ் அவர்களுக்கு தேர்தல் பணியில் முக்கிய பங்கு வகிப்பார்.

ALSO READ | சுதந்திர தின வரலாற்றில் முதல் முறையாக நயாகரா நீர்வீழ்ச்சியில் மூவர்ண கொடி பறக்கும்..!!!

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கு தொடர்பாக, பிகார் அரசும், மகாராஷ்டிரா அரசும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வரும் நிலையில், தேவேந்திர பட்னவிஸ் தொடர்பான இந்த தகவல் வெளியாகியுள்ளது.

சுஷாந்த் சிங் ராஜ்புத் பிகரை சேர்ந்தவர் என்பது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. 

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *